Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விவேக் மரணத்திற்கு மோடி இரங்கல்!

Webdunia
சனி, 17 ஏப்ரல் 2021 (12:32 IST)
நடிகர் விவேக்கின் திடீர் மரணம் அனைவரையும் வேதனையில் ஆழ்த்தியுள்ளது என்று பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். 

 
பிரபல நகைச்சுவை நடிகர் விவேக் குடும்பத்தினருடன் வீட்டில் பேசிக் கொண்டிருக்கும்போது மயங்கி விழுந்தார் என்றும் உடனடியாக சென்னை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இவர் கடந்த 15 அம் தேதி கொரோனா தடுப்பூசியை போட்டுக்கொண்டார் என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம்.     
 
இதனிடையே அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் நேற்று செய்தி வெளியிட்டன. இந்நிலையில் இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக மருத்துவமனை தெரிவித்துள்ளது.  இவரது மரணத்திற்கு பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.  
 
அந்த வகையில், இதுகுறித்து மோடி தனது ட்விட்டர் பதிவில், சமயோசித நகைச்சுவை உணர்வுக்கும் புத்திசாலித்தனமான வசனங்களுக்கும் சொந்தக்காரர் விவேக். தனது நகைச்சுவையால் ஏராளமான மக்களை மகிழ்வித்தவர் நடிகர் விவேக். தனிப்பட்ட வாழ்க்கையிலும் திரைப்படங்களிலும் சூழலியல் பாதுகாப்பை வலியுறுத்திவர் விவேக். விவேக்கின் பிரிவால் வாடும் அவரது குடும்பத்துக்கும், ரசிகர்களுக்கும் ஆழ்ந்த இரங்கல் என குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரஷ்யாவிடம் இழந்த பகுதிகளை யுக்ரேன் மீட்க அமெரிக்கா உதவுமா? டிரம்பின் முன்னாள் ஆலோசகர் தகவல்

ரூ.500 நோட்டாக மாறிய முத்திரைத்தாள்: யூடியூப் பார்த்து கள்ளநோட்டு அச்சடித்த கும்பல்..

3.60 கோடி லிட்டர் தண்ணீர் திருடிய தனியார் கல்லூரி: ரூ.2 கோடி அபராதம்!

234 தொகுதிகளிலும் எங்கள் கூட்டணி வெல்லும்.. திமுக கூட்டணி 2026 வரை நீடிக்காது: பிரேமலதா..!

விவசாயக் கடன் தள்ளுபடி.. பென்சன் வரம்பு உயர்வு.. 25 லட்சம் வேலைவாய்ப்பு! - மகாராஷ்டிரா பாஜக வாக்குறுதிகள்!

அடுத்த கட்டுரையில்
Show comments