Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மோடியை சந்திக்கிறார் மம்தா பானர்ஜி.. அப்பாயின்மெண்ட் கொடுத்த பிரதமர் அலுவலகம்..!

Webdunia
புதன், 13 டிசம்பர் 2023 (07:48 IST)
வரும் 20ஆம்  தேதி பிரதமர் மோடியை மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி சந்திக்க இருப்பதாகவும் இதற்கான அப்பாயின்மென்ட்டை பிரதமர் அலுவலகம் கொடுத்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளன.

பிரதமர் மோடியை பதவியில் இருந்து நீக்கியே தீருவேன் என்று கங்கணம் கட்டிக் கொண்டிருப்பவர்களில் ஒருவர் மம்தா பானர்ஜி. இந்த நிலையில் மம்தா பானர்ஜி தனது மாநிலத்திற்கான நிதி நிலுவை தொகையை விடுவிப்பது குறித்து பிரதமர் மோடியை சந்திக்க இருப்பதாகவும் டிசம்பர் 20ஆம் தேதி பிரதமர் மோடியை சந்திக்க அவருக்கு பிரதமர் அலுவலகம் அப்பாயிண்ட்மெண்ட் கொடுத்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

பிரதமர் மோடியை சந்தித்து தனது மாநிலத்திற்கு தேவையான நிதி நிலை தொகையை விடுவிக்க அவர் கோரிக்கை விட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன. டிசம்பர் 20ஆம் தேதி காலை 11 மணி அளவில் மோடி - மம்தா சந்திப்பு நடைபெற இருப்பதாகவும் மேற்கு வங்காளத்திற்கு 1.15 லட்சம் கோடி மத்திய அரசு பாக்கி வைத்துள்ள நிலையில்  அந்த தொகையை விடுவிக்க அவர் கோரிக்கை விடுப்பார் என்றும் கூறப்படுகிறது.

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சூரியனார் கோவில் ஆதீனம் திருமண சர்ச்சை - மடத்தில் இருந்து வெளியேறியது ஏன்?

மருத்துவர் தாக்குதல் எதிரொலி: அரசு மருத்துவமனைகளில் புதிய கட்டுப்பாடு..!

2 குழந்தைகளுக்கு மேல் இருந்தா பிரச்சினை இல்ல.. தேர்தலில் போட்டியிடலாம்! - சட்டத்தை மாற்றிய சந்திரபாபு நாயுடு!

உங்களுக்கு நீரிழிவு நோய் இருக்கிறதா? உடனே இதை செய்யுங்கள்.. ஏஆர் ரஹ்மானின் பதிவு..!

சென்னை அப்போலோ மருத்துவமனையில் வைகோ அனுமதி.. என்ன ஆச்சு?

அடுத்த கட்டுரையில்
Show comments