ஆர்.எஸ்.எஸ் பாடலை பாடிய பள்ளி மாணவர்கள்.. கேரள முதல்வர் பினராயி விஜயன் கண்டனம்..!

Siva
திங்கள், 10 நவம்பர் 2025 (15:10 IST)
எர்ணாகுளம் - பெங்களூரு வந்தே பாரத் விரைவு ரயிலின் தொடக்க விழாவின்போது கேரள பள்ளி மாணவர்கள் ஆர்.எஸ்.எஸ். கீதம் பாடிய வீடியோ, மாநிலத்தில் பெரும் அரசியல் சர்ச்சையை கிளப்பியுள்ளது. 
 
கேரள கல்வித்துறை அமைச்சர் வி. சிவன்குட்டி, அரசியலமைப்பு மற்றும் மதச்சார்பற்ற கொள்கைகளுக்கு எதிரான செயல் என கூறி, இந்த சம்பவம் குறித்து விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார். 
 
அரசு நிகழ்வுகளில் குழந்தைகளை பயன்படுத்தி, எந்தவொரு குழுவின் வகுப்புவாத நிகழ்ச்சி நிரலை ஊக்குவிப்பதும் அரசியலமைப்பு மீறலாகும்" என்று அவர் தெரிவித்தார்.
 
கேரள முதல்வர் பினராயி விஜயன், வகுப்புவாத கொள்கை கொண்ட ஒரு அமைப்பின் கீதத்தை அரசு நிகழ்வில் சேர்த்ததற்கு எதிர்ப்புத் தெரிவித்தார். ரயில்வே நிர்வாகம் சங் பரிவார் அரசியலால் குலைக்கப்பட்டுவிட்டதாகக்குற்றம் சாட்டினார்.
 
இதுகுறித்து பள்ளி முதல்வர் கூறியபோது, அது ஒரு தேசபக்தி மலையாள பாடல் என்றும், மாணவர்கள் தாமாக விரும்பி பாடினர் என்றும் கூறினார்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

செங்கோட்டையனை திடீரென சந்தித்த அமைச்சர் சேகர்பாபு.. திமுகவா? தவெகவா?

எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்த செங்கோட்டையன்.. அடுத்தது தவெகவா?

2 ஆணுறுப்புகளுடன் பிறந்த குழந்தை: அறுவை சிகிச்சை செய்து சாதனை செய்த மருத்துவர்கள்..!

கார், பைக் மோதல்.. பைக்கில் இருந்த குழந்தை காற்றில் வீசப்பட்டு காரில் கூரையில் விழுந்தது.. அதன்பின் நிகழ்ந்த அதிர்ச்சி..!

சட்டீஸ்கரில் மர்மமான தம்பதி மரணம்: லிப்ஸ்டிக் எழுதிய குறிப்புகள் மூலம் விசாரணை..!

அடுத்த கட்டுரையில்
Show comments