Webdunia - Bharat's app for daily news and videos

Install App

”அனுமன் சலிசா சொன்னால் கொரோனா போய்டும்!” – அடுத்த சர்ச்சையை கிளப்பிய பாஜக எம்.பி!

Webdunia
ஞாயிறு, 26 ஜூலை 2020 (15:38 IST)
உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ள நிலையில் கொரோனாவை ஒழிக்க அனுமன் சலிசா மந்திரத்தை சொல்ல வேண்டும் என பாஜக எம்.பி பிரக்யா தாகூர் கூறியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த மருந்து கண்டுபிடிக்க பல்வேறு நாடுகள் பல முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. அதேசமயம் கொரோனா மற்றும் கொரோனா தடுப்பு குறித்த தவறான தகவல்களும் இணையத்தில், சமூக வலைதளங்களில் அதிகரித்து வருகின்றன. கொரோனா குறித்த ஆதாரமற்ற தகவல்களை சமூக வலைதளங்களில் பகிர வேண்டாம் என மத்திய அரசு தொடர்ந்து மக்களுக்கு அறிவுறுத்தி வரும் நிலையில், பிரதமர் மோடியும் மன் கீ பாத் நிகழ்ச்சியில் இந்த கோரிக்கையை வைத்தார்.

இந்நிலையில் பாஜக பிரபலங்களே தொடர்ந்து தவறான தகவல்களை மக்களிடம் பரப்பி வருவது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக கொரோனாவை ஒழிக்க பசு கோமியம், பாபிஜீ அப்பளம் போன்ற சர்ச்சைகளை தொடர்ந்து மேலும் ஒரு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார் பாஜக எம்பி பிரக்யாசிங் தாகூர். சமீபத்தில் கொரோனாவை ஒழிப்பது குறித்து பேசிய இவர் “தினமும் ஐந்து முறை அனுமன் சலிசா மந்திரத்தை சொல்லி வந்தால் உலகத்திலிருந்தே கொரோனா போய்விடும்” என கூறியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு QR கோடு மூலம் விண்ணப்பம்.. அமைச்சர் பாராட்டு..!

வெள்ளத்தில் மிதக்கும் பெங்களூரு.. கோடிகள் செலவு செய்தும் பயனில்லை.. எதிர்க்கட்சிகள் கண்டனம்..!

இந்தியாவில் முதன்முறையாக 5.5ஜி ஸ்மார்ட்போன்.. அறிமுகமாகும் தேதி அறிவிப்பு..!

சென்னை காவல் ஆணையர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்ற பெண்: அதிர்ச்சி சம்பவம்..!

மின் கட்டணத்தை உயர்த்தும் எண்ணமிருந்தால்? நயினார் நாகேந்திரன் எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments