Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது பி.எஸ்.எல்.வி. சி-58 ராக்கெட்! இஸ்ரோ விஞ்ஞானிகள் மகிழ்ச்சி..!

Webdunia
திங்கள், 1 ஜனவரி 2024 (11:15 IST)
இன்று பிஎஸ்எல்வி சி 58 என்ற ராக்கெட் ஏவப்படும் என்றும் ஏற்கனவே கவுண்டவுன் தொடங்கி விட்டதாக செய்திகள் வெளியான நிலையில் சற்றுமுன் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டதாக இஸ்ரோ அறிவித்துள்ளது

இஸ்ரோவின் எக்ஸ்போசாட் உள்ளிட்ட 11 செயற்கைக்கோள்களுடன் சற்று முன்னர் பிஎஸ்எல்வி சி58 ராக்கெட் விண்ணில் பாய்ந்தது. கருந்துளை, நியூட்ரான் நட்சத்திரங்கள் போன்ற வானியல் நிகழ்வுகளை விரிவாக ஆய்வு செய்ய எக்ஸ்போசாட் செயற்கைகோள் வடிவமைக்கப்பட்டிருந்தது.

இந்த செயற்கைக்கோளை பூமியில் இருந்து சுமார் 650 கிலோ மீட்டர் தொலைவில் நிலை நிறுத்தி ஆய்வுகள் மேற்கொள்ள இஸ்ரோ திட்டமிட்டுள்ளது. இந்த ராக்கெட்டில் திருவனந்தபுரம் கல்லூரி மாணவ மாணவிகள்  ரெசார்ட் செயற்கைக்கோளும் ஏவப்பட்டு உள்ளது.

2024 ஆம் ஆண்டில் முதல் நாளிலேயே இஸ்ரோவால் விண்ணில் ஏவிய ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பறந்தது என்பதும் பி.எஸ்.எல்.வி. வகை ராக்கெட்டில் இது 60வது விண்வெளி பயணம் என்பது குறிப்பிடத்தக்கது.


Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பதி லட்டில் மாட்டுக் கொழுப்பு கலந்தது உறுதி.! ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!!

ஆம்ஸ்ட்ராங் கொலையில் தொடர்பு.! செல்வப்பெருந்தகையை நீக்குக.! ராகுல் காந்திக்கு BSP கடிதம்..!

வேளாண் தொழில்நுட்பக் கல்லூரியில் ஸ்பெக்ட்ரா கூட்டரங்கத்தை முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி திறந்து வைத்தார்!

திருப்பதி லட்டில் விலங்கு கொழுப்பா? சந்திரபாபு நாயுடு சத்தியம் செய்வாரா? ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் பதிலடி

இன்றிரவு 10 மாவட்டங்களில் மழை பெய்யும்: வானிலை அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments