Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

3வது நாளாக தர்ணா போராட்டம் செய்யும் முதல்வர்: என்ன நடக்கின்றது புதுச்சேரியில்!

Advertiesment
புதுவை
, வெள்ளி, 15 பிப்ரவரி 2019 (08:50 IST)
புதுவை ஆளுனரின் போக்கை கண்டித்து அம்மாநில முதல்வர் நாராயணசாமி நேற்று முன் தினம் தர்ணா போராட்டத்தை தொடங்கிய நிலையில் இன்று 3வது நாளாக இந்த போராட்டம் தொடர்கிறது.

இந்த போராட்டம் குறித்து சற்றுமுன் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் நாராயணசாமி, '▪ஒரு மணி நேரத்தில் முடிக்கக்கூடிய பிரச்சனையை வேண்டுமென்றே கிரண்பேடி தாமதப்படுத்தி வருவதாகவும், புதுச்சேரி  ஊதிய உயர்வு, மானியம் உள்ளிட்ட நலத் திட்டங்களுக்காக அறவழியில் போராட்டம் செய்வதாகவும் கூறினார்.

இந்த நிலையில் புதுச்சேரியில் இடைக்கால நிர்வாகியை நியமிக்க வலியுறுத்தி மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அவர்களுக்கு புதுச்சேரி சபாநாயகர் வைத்திலிங்கம் கடிதம் எழுதியுள்ளார். புதுச்சேரியில் அசாதாரண சூழல் நிலவுவதாகவும் அவர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாக தகவல்  வெளிவந்துள்ளது.

புதுவை
இந்த நிலையில் முதலமைச்சர் நாராயணசாமி மற்றும் அமைச்சர்கள் தங்களுடைய அன்றாட அலுவல்களை சாலையில் அமர்ந்தவாறு செய்து வருகின்றனர் என்பதும், அவர்கள் தங்களுக்கான உணவுகளையும் சாலையில் அமர்ந்தவாறே உண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் டெல்லி சென்றுள்ள ஆளுனர் கிரண்பேடி இன்று புதுவை திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

காஷ்மீர் தாக்குதல் எதிரொலி; இண்டர்நெட் சேவை திடீர் நிறுத்தம்