Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புல்வாமா தாக்குதல் தினம் அனுசரிப்பு..! உயிர்த்தியாகம் செய்த வீரர்களுக்கு வீரவணக்கம்.!! பிரதமர் மோடி

Senthil Velan
புதன், 14 பிப்ரவரி 2024 (16:04 IST)
புல்வாமா தாக்குதலின் நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படும் நிலையில், உயிர் நீத்த வீரர்களுக்கு மரியாதையும் அஞ்சலியும் செலுத்துகிறேன் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
 
ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமா பகுதியில், கடந்த 2019-ம் ஆண்டு பிப்ரவரி 14-ம் தேதி ராணுவ வாகனங்கள் அணிவகுத்து சென்ற போது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 40 வீரர்கள் வீர மரணம் அடைந்தனர்.
 
இந்த தாக்குதலின் ஐந்தாம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படும் நிலையில் உயிர் தியாகம் செய்த வீரர்களுக்கு பல்வேறு இடங்களில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி  நடைபெற்றது.
 
இந்நிலையில் புல்வாமா தாக்குதலின் நினைவு தினத்தை ஒட்டி, பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், புல்வாமாவில் வீரமரணம் அடைந்த வீரர்களுக்கு மரியாதையையும் அஞ்சலியையும் செலுத்துகிறேன் என குறிப்பிட்டுள்ளார்.

ALSO READ: சட்டமன்றத்தை முற்றுகையிட முயற்சி..! போலீசார் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு..!!

நமது தேசத்துக்காக அவர்கள் ஆற்றிய சேவையும் தியாகமும் என்றும் நினைவுகூரப்படும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அம்பானி வீட்டை காப்பாற்ற தான் வக்பு திருத்த சட்டம் கொண்டு வரப்பட்டதா? கனிமொழி எம்.பி

ஹரியானாவுக்கு ஒரு சொட்டு நீர் கூட வழங்க முடியாது: பஞ்சாப் அரசு

2 நாட்களாக துரத்தி துரத்திக் கடித்த தெருநாய்! 10 பேரை கடித்ததால் பரபரப்பு! - பீதியில் மக்கள்!

அகமதாபாத்தில் ஒரு மினி வங்கதேசம்.. 4000 வீடுகள் இடிப்பு.. முக்கிய நபர் கைது..!

வங்கதேசத்தினர் ஆக்கிரமிப்பு செய்து கட்டிய வீடுகள் மொத்தமாக இடிப்பு.. டெல்லியில் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments