தற்போது அமெரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து வரும் ராகுல் காந்தி அங்கு நடந்த ஒரு நிகழ்ச்சியில் இந்திய தேர்தல் ஆணையம் சுதந்திரமாக செயல்படவில்லை என குற்றம் சாட்டியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
அமெரிக்காவில் உள்ள பாஸ்டனில் இந்தியர்கள் முன்பு உரையாடிய ராகுல் காந்தி மகாராஷ்டிரா மாநில சட்டசபை தேர்தலின் போது தேர்தலில் சீர்கேடு ஏற்பட்டுள்ளது என்றும் தேர்தல் ஆணையம் அதை கண்டுகொள்ளவில்லை என்றும் குற்றம் சாட்டியுள்ளார்.
தேர்தல் ஆணையம் சுதந்திரமாக செயல்படவில்லை என்றும் ஏதோ கடுமையான சிக்கலில் சிக்கி உள்ளது என்று கூறிய ராகுல் காந்தி மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மக்கள் எண்ணிக்கை விட அதிகமானவர்கள் வாக்களித்து உள்ளார்கள் என்றும் இரண்டு மணி நேரத்தில் 65 லட்சம் வாக்குகள் பதிவாகியுள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.
இது சாத்தியமில்லாத விஷயம் என்று கூறிய நிலையில் ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுகளை தேர்தல் ஆணையம் கடுமையாக மறுத்துள்ளது. எந்த விதமான ஆதாரமும் இல்லாத குற்றச்சாட்டுகளை ராகுல் காந்தி தெரிவித்துள்ளார் என்றும் அதுவும் வெளிநாட்டில் தெரிவித்துள்ளார் என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.