Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மத்திய அரசை எதிர்த்து 14 எதிர்கட்சிகள் பேரணி! – டெல்லியில் பரபரப்பு!

Webdunia
வியாழன், 12 ஆகஸ்ட் 2021 (11:45 IST)
நாடாளுமன்றம் திட்டமிட்ட தேதிக்கு முன்னரே முடிக்கப்பட்டதை கண்டித்து டெல்லியில் 14 எதிர்கட்சிகள் இணைந்து பேரணி நடத்தி வருகின்றது.

நாடாளுமன்ற கூட்டத்தொடர் சமீபத்தில் தொடங்கிய நிலையில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் பெகாசஸ் விவகாரம் குறித்து ஆலோசிக்க கோரி தொடர் அமளியில் ஈடுபட்டதால் தொடர்ந்து நாடாளுமன்ற இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டது.

அதை தொடர்ந்து தற்போது நிர்ணயித்த காலத்திற்கு முன்பே கூட்டத்தொடர் முடித்துக் கொள்ளப்பட்டுள்ளது. இதற்கு மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து ராகுல் காந்தி தலைமையில் திமுக உள்ளிட்ட 14 எதிர்கட்சிகளை சேர்ந்த எம்.பிக்கள் இன்று டெல்லியில் பேரணி நடத்தினர்.

இதுகுறித்து பேசிய ராகுல்காந்தி “நாட்டு மக்களின் குரலை ஒன்றிய அரசு ஒடுக்குகிறது.. பெகாசஸ் பிரச்சனையை விவாதிக்க கோரினோம்.. ஒன்றிய அரசு அனுமதிக்கவில்லை” என்று கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மதுரை ஆதீனத்தை கொல்ல தீவிரவாதிகள் சதியா? சிசிடிவி வீடியோவை வெளியிட்ட போலீஸார்!

இம்ரான்கானின் அனைத்து சமூக வலைத்தளங்களுக்கும் தடை.. மோடி அரசின் இன்னொரு அதிரடி..!

அவசர அவசரமாக பிரதமரை சந்தித்த விமானப்படை, கப்பல் படை தலைவர்கள்.. இன்று போர் ஆரம்பமா?

ஜம்மு அணையில் இருந்து பாகிஸ்தான் செல்லும் தண்ணீர் நிறுத்தம்.. மோடியின் மாஸ்டர் ஸ்ட்ரோக்..!

நீட் தேர்வுக்காக இப்படி அடம்பிடிப்பது நியாயமே அல்ல! - மத்திய அரசுக்கு அன்புமணி ராமதாஸ் வேண்டுகோள்!

அடுத்த கட்டுரையில்
Show comments