Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எனக்கும் அதுக்கும் சம்மந்தமில்லை – ஒதுங்கிக்கொண்ட ராகுல்காந்தி !

Webdunia
வெள்ளி, 21 ஜூன் 2019 (08:58 IST)
காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவர் யார் என்பதைக் கட்சி முடிவு செய்யும் என ராகுல் காந்தி அதிரடியாக அறிவித்துள்ளார்.

நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் 542 தொகுதிகளில் காங்கிரஸ் வெறும் 52 தொகுதிகளை மட்டுமே பெற்று எதிர்க்கட்சி அந்தஸ்தை இழந்துள்ளது. இதையடுத்து காங்கிரஸின் காரிய கமிட்டி கூடிய போது கட்சியின் தோல்விக்கு பொறுப்பேற்று ராகுல் காந்தி தனது பதவியை ராஜினாமா செய்தார்.  இதை சற்றும் எதிர்பாராத காரிய கமிட்டியினர் ராகுல் ராஜினாமா செய்யக்கூடாது என்றும், தொடர்ந்து தலைவர் பதவியில் நீடிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டதோடு அவரது ராஜினாமாவை நிராகரித்தனர். அதோடு ராகுலை சந்தித்து சமாதானம் செய்யும் முயற்சியிலும் ஈடுபட்டனர். ஆனால் ராகுல் காந்தி தனது முடிவில் உறுதியாக இருக்கிறார். மேலும் காங்கிரஸ் கட்சியின் அடுத்த தலைவர் நேரு குடும்பத்தில் இருந்து இல்லாமல் வேறு யாராவதாக இருக்க வேண்டும் என அவர் விரும்புவதாகத் தெரிகிறது.

இந்நிலையில் நேற்று நாடாளுமன்றத்தில் இருக்கும் காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் இருந்து வெளியே வந்த ராகுல் காந்தியிடம் செய்தியாளர் ஒருவர் ‘ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்டை காங்கிரஸ் அடுத்தத் தலைவராக நியமிக்க வேண்டும் என நீங்கள் அறிவுறுத்தியுள்ளதாக தகவல்கள் வருகிறதே ?’ எனக் கேட்டார். அதற்குப் பதிலளித்த ராகுல் ‘அடுத்தத் தலைவரை நியமிக்க நான் யார் ? அதைக் கட்சி பார்த்துக்கொள்ளும்’ எனக் கூறி சென்று விட்டார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அனைவருக்கும் ரூ.1000 என்பது திமுக அரசின் நாடகம்: டாக்டர் ராமதாஸ்

பட்டப் பகலில் அரங்கேறும் குற்றச் செயல்கள்.. கத்திக்குத்து சம்பவம் குறித்து தவெக விஜய்..!

என் மகன் செய்தது தப்புதான், ஆனால் மருத்துவர் என்னை திட்டுவார்: கத்தியால் குத்திய விக்னேஷ் தாய் பேட்டி..!

அமைச்சர் பேச்சுவார்த்தை எதிரொலி: மருத்துவர்கள் போராட்டம் வாபஸ்..!

அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ரூ.1000 மகளிர் உதவித்தொகை: அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்

அடுத்த கட்டுரையில்
Show comments