Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ராகுலை கீழே தள்ளவில்லை, கீழே விழுந்தார்: அரசியலாகிறதா ஹத்ரஸ் விவகாரம்?

Webdunia
வியாழன், 1 அக்டோபர் 2020 (16:07 IST)
ஹத்ரஸில் காவல்துறையினர் தடுத்தி நிறுத்திய போது கீழே விழுந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. 
 
உத்தர பிரதேசத்தில் இளம்பெண் ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்த நான்கு பேர் கொண்ட கும்பல், இதை அவர் வெளியில் சொல்லாதிருக்க அந்த பெண்ணின் நாக்கை வெட்டியதோடு, கடுமையாக தாக்கி சாலையில் வீசி சென்றுள்ளனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அந்த பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.  
 
தேசிய அளவில் இந்த வன்கொடுமை சம்பவம் பெரும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது. கொல்லப்பட்ட பெண்ணுக்கு நீதி வேண்டும் என பலர் குரல் கொடுக்க தொடங்கியுள்ளனர். 
இந்நிலையில் உத்தரபிரதேசத்தின் காங்கிரஸ் கட்சி பொறுப்பாளர்  பிரியங்கா காந்தி மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி ஆகியோர் இன்று உயிரிழந்த பெண்ணின் குடும்பத்தினரை சந்திக்க திட்டமிட்டிருந்தனர்.  
 
ஆனால், வருகைக்கு முன்னதாக ஹத்ரஸில் 144  விதிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவரின் கிராமத்திற்குள் நுழைவதற்கு ஊடகங்களுக்கும் தடை விதிக்கபட்டு உள்ளது.  இதனை மீறியும் பிரியங்கா காந்தி, ராகுல் காந்தி ஆகியோர் அங்கு செல்ல முற்பட்டனர். 
 
ஹத்ரஸ் மாவட்டத்தில் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு உயிரிழந்த பெண்ணின் குடும்பத்தை சந்திக்க சென்ற ராகுல் காந்தியை போலீசார் கைது செய்தனர். ராகுல் காந்தி போலீசார் தன்னை கீழே தள்ளிவிட்டு லத்தியால் அடித்ததாக ராகுல் காந்தி குற்றச்சாட்டிய நிலையில் ஹத்ரஸில் காவல்துறையினர் தடுத்தி நிறுத்திய போது கீழே விழுந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீட் பயிற்சி மாணவியை 6 மாதமாக பூட்டி வைத்து பாலியல் வன்கொடுமை..2 ஆசிரியர்கள் கைது!

இன்று வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வுப் பகுதி! 7 நாட்களுக்கு கனமழை..!

தவெக கொடிகள், துண்டுகள்.. திருப்பூரில் குவியும் ஆர்டர்கள்..!

அமெரிக்க தேர்தலில் வெற்றி எதிரொலி: தெலுங்கு டிரம்ப் கோவிலில் சிறப்பு வழிபாடு..!

நான் கேட்காமலேயே வரதட்சணை கொடுத்தனர்.. மனைவி குடும்பத்தின் மீது மாப்பிள்ளை வழக்கு..!

அடுத்த கட்டுரையில்