Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வட போச்சே! - பாஜக வழியில் சென்று வீழ்த்திய ராகுல்

Webdunia
செவ்வாய், 15 மே 2018 (16:34 IST)
கர்நாடகாவில் சரியான நேரத்தில் ராஜதந்திரமாக செயல்பட்டு பாஜகவை ஆட்சி அமைக்க விடாமல் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி தடுத்துள்ளார் என செய்திகள் வெளிவந்துள்ளது.

 
கடந்த 12ம் தேதி கர்நாடகாவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. இதன் வாக்கு எண்ணிக்கை இன்று காலை முதல் துவங்கியது. அதில், துவக்கம் முதலே பாஜக முன்னிலை வகித்து வந்தது. ஒரு கட்டத்தில் 110க்கும் அதிமான இடத்தில் பாஜக முன்னிலை வகிக்க, அந்த கட்சியே ஆட்சி அமைக்கும் என்ற நிலை உருவானது. 
 
ஆனால், ஆட்சி அமைக்க தேவையான 112 இடங்கள் பாஜகவிற்கு கிடைக்கவில்லை. மேலும், திடீர் திருப்பமாக, மஜத ஆட்சி அமைக்க காங்கிரஸ் தனது ஆதரவை தெரிவித்துள்ளது. காங்கிரஸின் முடிவை தேவகவுடாவும் ஏற்றுக்கொண்டார். எனவே, மஜத கட்சி கர்நாடகாவில் ஆட்சி அமைக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
 
பொதுவாக இதுபோன்ற முடிவுகளை இதற்கு முன்பு பாஜகவே எடுத்துள்ளது. 2017ம் ஆண்டு மார்ச் மாதம் கோவாவில் சட்டமன்ற தேர்தல் நடந்தபோது,  காங்கிரஸ் 17 இடங்களையும், பாஜக 13 இடங்களையும் பெற்றது. ஆனாலும், சுயேட்சை வாக்காளர்களை தங்கள் பக்கம் இழுத்து பாஜக ஆட்சி அமைத்தது. 
 
தற்போது 78 இடங்களை பெற்றுள்ள காங்கிரஸ் 37 இடங்களை பெற்றுள்ள மதசார்பற்ற ஜனதா தளத்திற்கு ஆதரவு கொடுத்துள்ளது. சரியான நேரத்தில் இந்த முடிவை எடுத்து பாஜக ஆட்சி அமைப்பதை  காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி தடுத்ததால் இது அவரின் ராஜதந்திரமாக பார்க்கப்படுகிறது. பாஜக 104 இடங்களை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு QR கோடு மூலம் விண்ணப்பம்.. அமைச்சர் பாராட்டு..!

வெள்ளத்தில் மிதக்கும் பெங்களூரு.. கோடிகள் செலவு செய்தும் பயனில்லை.. எதிர்க்கட்சிகள் கண்டனம்..!

இந்தியாவில் முதன்முறையாக 5.5ஜி ஸ்மார்ட்போன்.. அறிமுகமாகும் தேதி அறிவிப்பு..!

சென்னை காவல் ஆணையர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்ற பெண்: அதிர்ச்சி சம்பவம்..!

மின் கட்டணத்தை உயர்த்தும் எண்ணமிருந்தால்? நயினார் நாகேந்திரன் எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments