Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோகோ கோலா சர்ச்சை: ராகுல் காந்தியை கலாய்க்கும் நெட்டிசன்கள்

Webdunia
திங்கள், 11 ஜூன் 2018 (19:53 IST)
பாஜக பிரமுகர்கள்தான் அவ்வப்போது நெட்டிசன்களின் கையில் சிக்குவார்கள் என்றால் தற்போது காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியும் சிக்கியுள்ளார். சமீபத்தில் ராகுல்காந்தி கோகோ கோலா குறித்து கூறிய ஒரு கருத்தை நெட்டிசன்கள் தனி ஹேஷ்டேக் உருவாக்கி கலாய்த்து வருகின்றனர்.
 
இன்று பிற்படுத்தப்பட்டோர் வகுப்பு மக்களுக்கான மாநாடு ஒன்றில் பேசிய ராகுல்காந்தி, 'கோகோ கோலா நிறுவனத்தை நிறுவியர் யார் என்பது யாருக்காவது தெரியுமா? அவர்தான் முதலில் எலுமிச்சை சாற்றில் சர்க்கரை கலந்து பரிசோதித்தவர். அவரது பரிசோதனை அனைவராலும் பாராட்டப்பட்டது. அதன் பின்னர் அதில் கிடைத்த பணத்தில் தான் கோலா நிறுவனம் தொடங்கப்பட்டது' என்று கூறினார்.
 
ஆனால் கோகோ கோலா நிறுவனத்தை அமெரிக்க டாக்டர் ஒருவர் தொடங்கினார். உண்மை இவ்வாறிருக்க ராகுல் காந்தியின் கோகோ கோலா பேச்சு நெட்டிசன்களால் கலாய்க்கப்பட்டு தற்போது #AccordingToRahulGandhi என்ற ஹேஷ்டேக் டுவிட்டரில் டிரெண்ட் ஆகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று இரவு 30 மாவட்டங்களில் கனமழை: வானிலை எச்சரிக்கை..!

துருக்கி ஆப்பிள்களை மக்களே புறக்கணிக்கின்றனர்.. வியாபாரிகள் தகவல்..!

பொள்ளாச்சி வழக்கின் தீர்ப்பு நாளில் இளம்பெண் கூட்டு பலாத்காரம்.. வெளியே வராத செய்தி..!

இன்று மாலை 6 மணிக்கு மெழுகுவர்த்தி ஏற்ற வேண்டும்: நிர்வாகிகளுக்கு தவெக அறிவுறுத்தல்..!

ஜனாதிபதிக்கு சுப்ரீம் கோர்ட் காலக்கெடு: 8 மாநில முதல்வர்களுக்கு தமிழக முதல்வர் கடிதம்

அடுத்த கட்டுரையில்
Show comments