Webdunia - Bharat's app for daily news and videos

Install App

12 லட்சம் ரயில்வே ஊழியர்கள் வேலைநிறுத்தமா? ரயில் சேவை முடங்க வாய்ப்பு..!

Webdunia
ஞாயிறு, 5 நவம்பர் 2023 (08:16 IST)
இந்தியாவில் உள்ள 12 லட்சம் ரயில்வே ஊழியர்கள் வேலை நிறுத்தம் செய்ய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவதால் நாடு முழுவதும் ரயில்வே சேவை முடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  

மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று ரயில்வே ஊழியர்கள் கோரிக்கை விடுத்து வரும் நிலையில்  இதனை வலியுறுத்தி நாடு முழுவதும் ரயில்வே ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது

வேலை நிறுத்தம் குறித்து ஆலோசனை செய்வதற்காக நவம்பர் 20 மற்றும் 21 ஆம் தேதிகளில் ரயில்வே ஊழியர்கள் மத்தியில் வாக்கெடுப்பு நடைபெற உள்ளது. இந்த வாக்கெடுப்பில் போராட்டம் நடத்துவது உறுதி செய்யப்பட்டால்  ரயில்வே ஊழியர்கள் வேலை நிறுத்தம் செய்ய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

இந்தியாவில் உள்ள 12 லட்சம் ரயில்வே ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட முடிவு செய்தால் ரயில் போக்குவரத்து முற்றிலும் முடங்கும் அபாயம் இருப்பதாக கூறப்படுகிறது.

கடந்த 1974 ஆம் ஆண்டு ஒட்டுமொத்த ரயில்வே ஊழியர்கள் 20 நாட்கள் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில் 50 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ரயில்வே ஊழியர்கள் வேலை நிறுத்தம் செய்வார்களா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

அதற்குள் ரயில்வே ஊழியர்களிடம் ரயில்வே துறை அமைச்சகம் பேச்சுவார்த்தை நடத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அனைவருக்கும் ரூ.1000 என்பது திமுக அரசின் நாடகம்: டாக்டர் ராமதாஸ்

பட்டப் பகலில் அரங்கேறும் குற்றச் செயல்கள்.. கத்திக்குத்து சம்பவம் குறித்து தவெக விஜய்..!

என் மகன் செய்தது தப்புதான், ஆனால் மருத்துவர் என்னை திட்டுவார்: கத்தியால் குத்திய விக்னேஷ் தாய் பேட்டி..!

அமைச்சர் பேச்சுவார்த்தை எதிரொலி: மருத்துவர்கள் போராட்டம் வாபஸ்..!

அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ரூ.1000 மகளிர் உதவித்தொகை: அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்

அடுத்த கட்டுரையில்
Show comments