Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காங்கிரஸில் இருந்து தூக்கி எறியப்பட்ட சச்சின் பைலட்: அடுத்து யார்?

Webdunia
செவ்வாய், 14 ஜூலை 2020 (14:07 IST)
ராஜஸ்தான் அரசுக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய சச்சின் பைலட் துணை முதல்வர் பதவியில் இருந்து நீக்கம். 
 
ராஜஸ்தானில் ஆளும் காங்கிரஸ் கட்சியின் முதல்வர் அசோக் கெலாட்டுக்கும், துணை முதல்வர் சச்சின் பைலட்டிற்கும் இடையே மோதல் எழுந்துள்ளது. சச்சின் பைலட் தனக்கு ஆதரவாகவே அதிக எம்.எல்.ஏக்கள்  உள்ளதாக கூறி வருகிறார். 
 
கர்நாடகா, மத்திய பிரதேசத்தில் நடந்தது போன்று ராஜஸ்தானிலும் காங்கிரஸ் ஆட்சியை இழந்துவிட கூடாது என்பதில் கட்சி தலைமை தீவிரமாக இருந்தது. எனவே, நேற்று நடந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் அசோக் கெலாட் தலைமையிலான அரசாங்கத்தை ஆதரிக்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.   
 
இதனைத்தொடர்ந்து இன்று ஜெய்ப்பூரில் முதல்வர் அசோக் கெலாட் தலைமையில் கூட்டம் நடைபெற்றது. அதில் துணை முதல்வர் சச்சின் பைலட்டை காங்கிரசிலிருந்து நீக்க எம்எல்ஏக்கள் கூட்டத்தில் தீர்மானம் செய்தனர். 
 
அதன்படி சச்சின் பைலட்டின் துணை முதல்வர் பதவியும் ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் தலைவர் பதவியும் பறிக்கப்பட்டுள்ளது. சச்சின் பைலட்டுக்கு பதில் கோவிந்த் சிங் ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஸ்டாலின் தமிழக முதல்வர் ஆனால் முதல் கையெழுத்து பெண்களை தாலியை அறுக்காத அளவுக்கு நான் பார்த்துக்கொள்வேன் என சொன்னார்கள் அது என்ன ஆச்சு- அதிமுக அமைப்பு செயலாளர் சுதா.கே.பரமசிவன் கேள்வி!

திமுகவினர் நடத்திய பொதுக்குழு உறுப்பினர் கூட்டத்தில் பிரியாணிக்காக அடி உதை!

மாமன்னன் உதயநிதி ஸ்டாலினுக்கு உரிய நேரத்தில் துணை முதல்வர் பதவி கொடுப்பார் - அமைச்சர் செஞ்சி மஸ்தான்!

2026 தேர்தலில் MIC இல்லை..! வேறு சின்னத்தில் போட்டி - சீமான்.!!

நான் தோல்வியடைந்தால் இஸ்ரேல் பூமியில் இருந்து அழிக்கப்படும்.! டிரம்ப் பேச்சால் பரபரப்பு..!!

அடுத்த கட்டுரையில்
Show comments