Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நானும் விவசாயி மகன்தான்; எனக்கும் விவசாயம் தெரியும்! – எடப்பாடியார் ஸ்டைலில் ராஜ்நாத்சிங்!

Webdunia
புதன், 30 டிசம்பர் 2020 (10:07 IST)
மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக எதிர்கட்சிகள் பேசி வரும் நிலையில் தானும் விவசாயம் செய்தவன் என்றும், விவசாயம் குறித்து தெரியும் என்றும் மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக கடந்த ஒரு மாத காலத்திற்கும் மேலாக பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட மாநில விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் விவசாயிகளுக்கு ஆதரவாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகளும் தொடர்ந்து வேளாண் சட்டங்களை விமர்சித்து வருகின்றன. முக்கியமாக காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி மத்திய அரசு மீது காட்டமான விமர்சனங்களை வைத்து வருகிறார்.

இந்நிலையில் இதுகுறித்து பேசியுள்ள மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங் “ராகுல்காந்தியை விட விவசாயம் பற்றி எனக்கு நன்றாக தெரியும். ஏனென்றால் நான் ஒரு விவசாய குடும்பத்தில் பிறந்தவன். வேளாண் சட்டங்கள் மக்களுக்கு நன்மையை அளிக்க கூடியவை” என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருமணம் செய்த பெண் ஒருவர்.. முதலிரவுக்கு வந்த பெண் இன்னொருவர்.. மாப்பிள்ளை அதிர்ச்சி..!

வான்வழியை மூடிய பாகிஸ்தான்: பயணிகளுக்கு இண்டிகோ, ஏர் இந்தியா முக்கிய அறிவிப்பு..!

துணை வேந்தர்களுக்கு நள்ளிரவில் மிரட்டல்.. ஆளுனர் ரவி குற்றச்சாட்டு..!

தமிழகத்தில் இருக்கும் 200 பாகிஸ்தானியர்கள் வெளியேற்றப்படுவது எப்போது?

சுற்றுலா பயணிகளை தாக்கிய போராளிகள்.. நியூயார்க் டைம்ஸ் தலைப்புக்கு அமெரிக்கா கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments