Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அறுவை சிகிச்சையின்போது ராமர் கோயில் திறப்பு விழாவின் வீடியோ.. ஆந்திராவில் ஒரு ஆச்சரியம்..!

Siva
செவ்வாய், 20 பிப்ரவரி 2024 (07:59 IST)
ஆந்திராவில் அறுவை சிகிச்சை நடந்த போது நோயாளிக்கு மயக்க மருந்து கொடுக்காமல் ராமர் கோயில் திறப்பு விழாவின் வீடியோவை பார்க்க வைத்து அறுவை சிகிச்சை முடித்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

ஆந்திர மாநிலம் குண்டூர் என்ற பகுதியை சேர்ந்த மணிகண்டன் என்ற நோயாளிக்கு வயிற்று வலி காரணமாக அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய நிலையில் அவருக்கு அறுவை சிகிச்சையின் போது மயக்க மருந்துக்கு பதிலாக அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேக வீடியோவை ஆபரேஷன் தியேட்டரில் போட்டு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இது குறித்து மருத்துவர் கூறுகையில் மணிகண்டன், ராமர் மீது அதிகமான பக்தி வைத்திருந்ததாகவும் அதனால் அவருக்கு ராமர் கோயில் திறப்பு விழாவின் வீடியோவை போட்டு காண்பித்து அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாகவும் மணிகண்டனும் ராமர் கோவில் திறப்பு விழாவை சந்தோஷத்துடன் பார்த்துக் கொண்டே அறுவை சிகிச்சை செய்து கொண்டதாகவும் இடையிடையே அவர் ஜெய் ஸ்ரீ ராம் என்று கூறியதாகவும் தெரிவித்துள்ளார்.

மயக்க மருந்து இல்லாமல் ராமர் கோவில் வீடியோவை பார்த்துக் கொண்டிருக்கும்போதே நோயாளிக்கு அறுவை சிகிச்சை செய்தது ஒரு பக்கம் ஆதரவையும் இன்னொரு பக்கம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை - நெல்லை வந்தே பாரத் ரயில்.. பயணிகளுக்கு மகிழ்ச்சி அளிக்கும் தகவல்..!

கிழக்கு கடற்கரை சாலையில் ரூ.100 கோடியில் பூங்கா: தமிழக சுற்றுலா துறை தகவல்..!

சென்னை உள்பட 4 மாவட்டங்களில் மிக கனமழை: வானிலை எச்சரிக்கை..!

2 பேர் உயிருடன் எரித்து கொலை.. 9 பேர் மாயம்.. மணிப்பூரில் மீண்டும் பதட்டம்..!

தமிழகத்தில் விடிய விடிய மழை.. 2 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரி விடுமுறை அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments