Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காந்தியை கேலி பேசி சர்ச்சை ’டுவீட் ’ அதிகாரி பல்டி

Webdunia
திங்கள், 3 ஜூன் 2019 (15:49 IST)
மும்பையில் வசிக்கும் ஐ ஏஎஸ் அதிகாரி ஒருவர், மகாத்மா காந்தியை ரூபாய் நோட்டிலிருந்து நீக்க வேண்டுமென்று தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
மும்பை மாநகராட்சியில் துணை ஆணையராக பணியாற்றி  வருபவர் நிதி சவுத்ரி.ஐஏஎஸ் அதிகாரியான இவர் கடந்த மே17 ஆம் தேதி தனது டுவிட்டர் பக்கத்தில், ''காந்தியின் 150 வது பிறந்தநாள் கொண்டாட்டங்கள் நடைபெறுகின்றது.  மகாத்மா காந்தியை ரூபாய் நோட்டில் இருந்து நீக்க வேண்டும். உலகில் உள்ள காந்தி சிலைகள் அகற்றப்பட வேண்டும்.நிறுவங்களில் காந்தி பெயர் சூட்டப்பட்டதை மாற்ற வேண்டும். அதுதான் நாம் காந்திக்குச் செலுத்துகிற உண்மையான அஞ்சலியாக இருக்கும்''  என்று பதிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டார்.
 
மேலும் மகாத்மா காந்தியைச் சுட்டுக்கொன்ற நாதுராம் கோட்சேவுக்கு நன்றி என்று தெரிவித்திருந்தார். இவரது இக்கருத்து நாட்டில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
 
மக்கள் பலரும் நிதி சவுத்ரிக்குக் கண்டனங்கள் எழுப்பினர்.அவர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினார்கள்.
 
இந்நிலையில் தனக்கு நாடு முழுவதிலும் இருந்து எதிர்ப்பு உருவாதை தெரிந்த நிதி சவுத்ரி, தான் காந்தியை அவமதிக்கும் விதத்தில் இதைப் பதிவிடவில்லை. கேலிக்காகவே இதைப் பதிவிட்டேன் என்று தற்போது தெரிவித்து காந்தி பற்றிய பதிவை தனது டுவிட்டர் பக்கத்திலிருந்து நீக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அதிமுக என்ற இயக்கத்தை ரெய்டுகள் அசைத்து கூட பார்க்க முடியாது: ஈபிஎஸ்

அரசு ஊழியர்களை அமலாக்கத்துறை துன்புறுத்துகிறது: அமைச்சர் முத்துசாமி கண்டனம்..!

பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த கல்லூரி மாணவர் கைது.. ரகசிய தகவல் பரிமாறப்பட்டதா?

தமிழகத்தின் 14 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும்: வானிலை எச்சரிக்கை..!

ராயல் என்ஃபீல்டு அறிமுகம் செய்யும் முதல் மின்சார பைக்.. முழு விவரங்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments