Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பஞ்சாப் வங்கிக்கு கெடு விதித்த ரிசர்வ் வங்கி!

Webdunia
வெள்ளி, 16 பிப்ரவரி 2018 (15:27 IST)
நீரவ் மோடி நிறுவனத்தின் வெளிநாட்டு வைர இறக்குமதிகளுக்கான பணத்தை வெளிநாட்டு விற்பனையாளர்களுக்கு பஞ்சாப் நேஷனல் வங்கி தருமென பஞ்சாப் நேஷனல் வங்கியின் பணியாளர்கள் சிலர் போலியான உறுதியளிப்பு கடிதம் அளித்ததாக தெரிகிறது. 

இதை நம்பி இந்திய வங்கிகளின் வெளிநாட்டு கிளைகள் கோடிக்கணக்கான டாலரை பஞ்சாப் நேஷனல் வங்கிக்கு கடனாக கொடுத்தன. பஞ்சாப் நேஷனல் வங்கியின் கணக்கில் குவிந்த இந்த பணம் வெளிநாடுகளுக்கு கைமாறி இருக்கிறது. 
 
இதன் மூலம் ரூ.11,300 கோடி மோசடி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், ஊழியர்களின் மோசடி விளைவுகளுக்கு வங்கிதான் பொறுப்பு என்று ரிசர்வ் வங்கி கூறியுள்ளதாம்.
 
மேலும், இந்த விவகாரத்தில் பாதிக்கப்பட்ட 30 வங்கிகளுக்கு பஞ்சாப் நேஷனல் வங்கி ரூ.11,300 கோடியை அளிக்க வேண்டும் என ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது. இதை செய்ய தவறினால் வங்கி துறையின் நம்பகத்தன்மை பாதிக்கப்படும், நிதி சந்தையில் குழப்பம் ஏற்படும் எனவும் ரிசர்வ் வங்கி எச்சரித்துள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு QR கோடு மூலம் விண்ணப்பம்.. அமைச்சர் பாராட்டு..!

வெள்ளத்தில் மிதக்கும் பெங்களூரு.. கோடிகள் செலவு செய்தும் பயனில்லை.. எதிர்க்கட்சிகள் கண்டனம்..!

இந்தியாவில் முதன்முறையாக 5.5ஜி ஸ்மார்ட்போன்.. அறிமுகமாகும் தேதி அறிவிப்பு..!

சென்னை காவல் ஆணையர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்ற பெண்: அதிர்ச்சி சம்பவம்..!

மின் கட்டணத்தை உயர்த்தும் எண்ணமிருந்தால்? நயினார் நாகேந்திரன் எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments