Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெண்களுக்கு மாதம் ரூ.1000: தமிழகத்தை முந்திய மத்திய பிரதேசம்..!

Webdunia
புதன், 1 மார்ச் 2023 (19:57 IST)
பெண்களுக்கு மாத ரூபாய் 1000 உதவித்தொகை வரும் பட்ஜெட்டில் அறிவிக்கப்படும் என தமிழக முதல்வர் முக ஸ்டாலின் தெரிவித்திருக்கும் நிலையில் மத்திய பிரதேசம் மாநில பட்ஜெட்டில் குடும்பத் தலைவருக்கு மாதம் ரூபாய் 1000 என்ற அறிவிப்பு வெளியாகி உள்ளது. மத்திய பிரதேசம் மாநிலத்தில் இன்று பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் இந்த பட்ஜெட்டில் பல முக்கிய அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. இதில் முக்யமந்திரி லட்லி பெஹ்னா யோஜனா' திட்டத்தின் கீழ், வருமான வரி செலுத்தாத பெண்களின் வங்கிக் கணக்கில் மாதம் 1000 ரூபாய் டெபாசிட் செய்யப்படும். ஊட்டச்சத்துக் குறைபாட்டைச் சமாளிக்க, பிற்படுத்தப்பட்ட பழங்குடியினரான பைகா, பரியா மற்றும் சஹாரியா குடும்பங்களைச் சேர்ந்த பெண்களின் வங்கிக் கணக்கில் ஆதார் அனுதய யோஜனாவின் கீழ் ரூ.1000 டெபாசிட் செய்யப்படும் என்றும் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
 
வருமான வரி செலுத்தாத பெண்களின் வங்கிக் கணக்கில் மாதம் டெபாசிட் செய்யப்படும் என்ற இந்த அறிவிப்பு பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. 
 
மத்திய பிரதேசம் மாநிலத்தில் இந்த ஆண்டு இறுதியில் தேர்தல் நடைபெற உள்ளதை அடுத்து பாஜக பல்வேறு சலுகைகளை அள்ளி வழங்கி உள்ளதாக கூறப்படுகிறது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியாவின் எதிர்ப்பை மீறி பாகிஸ்தானுக்கு ரூ.8542 கோடி நிதி: ஐ.எம்.எப்க்கு கடும் கண்டனங்கள்..!

பாகிஸ்தான் தாக்குதலில் ஜம்முவின் முக்கிய அதிகாரி பலி.. முதல்வர் உமர் அப்துல்லா இரங்கல்..!

4 மாவட்டங்களை குளிர்விக்க வருகிறது மழை! இன்றைய மழை வாய்ப்பு!

விஸ்வரூபமெடுக்கும் போர்..! 32 எல்லையோர இந்திய விமான நிலையங்கள் மூடல்!

ஜம்முவில் இடைவிடாத குண்டு வெடிப்புச் சத்தம்? மின்சாரம் துண்டிப்பு! - காஷ்மீர் முதல்வர் பதிவு!

அடுத்த கட்டுரையில்
Show comments