காளகஸ்தி கோவில் செல்போனை எடுத்துச் சென்றால் 5000 ரூபாய் அபராதம் என அந்த கோவிலின் தேவஸ்தான அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
ஆந்திர மாநிலத்தில் உள்ள காளகஸ்தி கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள் என்பதும் இந்த கோயில் மிகவும் புனிதமானது என்பதும் குறிப்பிடத்தக்கது.
சிவனின் தேவார பாடல் பெற்ற 274 ஆலயங்களில் இது 252 வது ஆலயம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் காளகஸ்தி கோவிலில் பக்தர்கள் செல்போனை எடுத்து வருவதால் சாமி கும்பிடும் போது தொந்தரவாக இருப்பதாக பலர் புகார் அளித்தனர்.
இதனை அடுத்து கோவிலுக்குள் செல்போன் எடுத்துச் சென்றால் 5000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. மேலும் இந்த அபராதத்தை செலுத்த தவறினால் செல்போன் பறிமுதல் செய்யப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளதால் இந்த கோயிலுக்கு செல்பவர்கள் இனி செல்போனை எடுத்துச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது.