Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியாவில் இருந்து ரூ.88,032 கோடியை காணவில்லை என தகவல்

Webdunia
சனி, 17 ஜூன் 2023 (19:37 IST)
இந்தியாவில் இருந்து ரூ.88032 கோடியை காணவில்லை என தகவல் வெளியாகிறது.
 
பிரதமர் மோடி தலைமையிலான  பாஜக அரசு கடந்த 2016 ஆம் ஆண்டு கறுப்பு பணத்தை  ஒழிக்கும் நடவடிக்கையாக,  பண மதிப்பு இழப்பு நடவடிக்கை எடுக்கப்பட்ட பின்னர் புதிய 500 ரூபாய் 2000 ரூபாய் நோட்டு அறிமுகம் செய்யப்பட்டது.

ஆனால் கடந்த சில ஆண்டுகளாக பொதுமக்களிடம் 2000 ரூபாய் நோட்டு வழக்கத்தில் இல்லாத நிலையில் சமீபத்தில், திடீரென 2000 ரூபாய் நோட்டை திரும்ப பெறுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்தது.

இந்த நிலையில், மக்கள் தங்களிடம்  உள்ள 2 ஆயிரம் நோட்டுகளை வங்கிகளில் கொடுத்து வருகின்றனர்.

வரும் செப்டம்பர் 30 ஆம் தேதிக்குள் வங்கிகளில் கொடுத்து  அல்லது பேங்கில் வங்கிக் கணக்கில் டெபாசிட் செய்து கொள்ளலாம் என்று அறிவித்துள்ளது.

இந்த  நிலையில்,  இந்தியாவில் இருந்து ரூ.88032 கோடியை காணவில்லை என்று தகவல் வெளியாகிறது.

இதுபற்றி தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் அளிக்கப்பட்டுள்ளது.

அதில்,  ஏப்ரல் 2015 – டிசம்பர் 2016 ஆம் ஆண்டு காலக்கட்டத்தில், 8810.65 மில்லியன் எண்ணிக்கையில் 500 ரூபாய் நோட்டுகள் அச்சடிக்கப்பட்டு, விநியோகிக்கப்பட நிலையில், 1760.65 மில்லியன் நோட்டுகள் மட்டுமே ரிசர்வ் வங்கிக்கு வந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

செந்தில் பாலாஜி ராஜினாமா செய்துவிட்டாரா? மசோதாவை தாக்கல் செய்த வேறொரு அமைச்சர்..!

எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் துப்பாக்கிச் சூடு: இந்தியா கொடுத்த பதிலடி..!

சென்னையில் இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம்..!

கோவைக்கு விஜய் வருகை.. மேள தாளத்துடன் வரவேற்கும் தொண்டர்கள்..!

இதுமாதிரி மறுபடியும் செய்யனும்ன்னு கனவில் கூட நினைக்க கூடாது: பஹல்காம் தாக்குதல் குறித்து ரஜினி..!

அடுத்த கட்டுரையில்
Show comments