Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நிதின்கட்காரியுடன் ஆர்.எஸ்.எஸ். பொதுச்செயலாளர் சந்திப்பு! பிரதமர் மாற்றம் உறுதி!

Webdunia
திங்கள், 20 மே 2019 (20:25 IST)
நேற்று வெளியான தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பின் முடிவுகளின்படி மீண்டும் பாஜக கட்சி கூட்டணி கட்சிகளுடன் இணைந்து ஆட்சியை பிடிக்கும் என்றே கருதப்படுகிறது. இருப்பினும் இந்த முறை மோடி பிரதமர் ஆக வாய்ப்பில்லை என்றும், மோடியை பிரதமராக கூட்டணி கட்சிகளில் சில கட்சிகள் ஏற்றுக்கொள்ளாது என்றும் வெளிவந்த செய்தியை ஏற்கனவே பார்த்தோம்
 
இந்த நிலையில் பாஜக ஆட்சி அமைத்தால் பிரதமராக நிதின்கட்காரி பதவியேற்க அதிக வாய்ப்பு இருப்பதாக பாஜக வட்டாரங்கள் கூறின. அதனை உறுதி செய்யும் வகையில் சற்றுமுன் நிதின்கட்காரியுடன் ஆர்.எஸ்.எஸ். பொதுச்செயலாளர் பையாஜி ஜோஷி சந்தித்து முக்கிய ஆலோசனை நடத்தினார். பாஜக தனிப்பெரும்பான்மை பெற்றாலோ அல்லது கூட்டணி கட்சிகளின் உதவியுடன் ஆட்சி அமைத்தாலோ மோடி மீண்டும் பிரதமர் ஆகக்கூடாது என்றும் நிதின் கட்காரியையே பிரதமராக்க ஆர்.எஸ்.எஸ். முயற்சி செய்வதாகவும் இந்த சந்திப்பின் மூலம் தெரிய வருவதாக பாஜக தலைவர்களில் சிலர் கூறி வருகின்றனர்.
 
இதனையடுத்து இப்போதே மோடியை சமாதானப்படுத்தும் வேலைகள் தொடங்கிவிட்டதாகவும், அவருக்கு கட்சித்தலைவர் பதவி அல்லது ஜனாதிபதி பதவி வழங்கப்பட வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. மே 23ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை முடிந்தவுடன் இன்னும் சில திருப்பங்கள் ஏற்படும் என்றும் டெல்லி வட்டாரங்கள் கூறுகின்றன

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மூச்சுவிட முடியாமல் பிறந்த பச்சிளம் குழந்தை இறந்த விவகார்ம: மருத்துவர் சஸ்பெண்ட்..!

6 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை.. வளர்ப்பு தந்தைக்கு மரண தண்டனை..!

நானும் திராவிடன் தான்: முதல்வர் ஸ்டாலினை சந்தித்த பின் எஸ்.வி.சேகர் பேட்டி..!

இன்று தான் விஸ்தாரா விமானங்களுக்கு கடைசி நாள்.. ஏன் தெரியுமா?

சொந்த செலவில் கல்வி உதவித்தொகை வழங்கிய விஜய்வசந்த் எம்பி.. எத்தனை லட்சம் தெரியுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments