Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாஜக மூத்த தலைவர் அத்வானி திடீர் உடல்நலக்குறைவு.. மருத்துவமனையில் அனுமதி..!

Mahendran
சனி, 14 டிசம்பர் 2024 (11:51 IST)
பாஜக மூத்த தலைவர் அத்வானி அவர்களுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதை அடுத்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
முன்னாள் துணை பிரதமரும் பாஜகவின் மூத்த தலைவருமான எல்.கே. அத்வானி அவர்களுக்கு அவ்வப்போது உடல்நிலை குறைவு ஏற்பட்டு வருகிறது. இந்த நிலையில், இன்று அவர் திடீரென உடல்நலக்குறைவு அடைந்தார்.
 
அதன் பின்னர், டெல்லி அப்பல்லோ மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டதாகவும், அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
 
மருத்துவமனையில் இருந்து வெளியான தகவலின் படி, தற்போது அவரது உடல்நிலை சீராக உள்ளது. மேலும், தொடர்ந்து மருத்துவர்களின் கண்காணிப்பின் கீழ் சிகிச்சை பெற்று வருகிறார்.
 
முன்னதாக, அத்வானி அவர்கள் கடந்த ஆகஸ்ட் மாதம் ஆறாம் தேதி உடல்நலக் குறைவு காரணமாக டெல்லி அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். அதன் பின்னர், சில நாட்களில் அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
இந்த நிலையில், அத்வானி அவர்கள் விரைவில் குணமாகி வீடு திரும்ப வேண்டும் என்று பாஜக தொண்டர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். 
 
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமைச்சர் துரைமுருகன் இலாகா மாற்றம்.. சில மணி நேரத்தில் மருத்துவமனையில் அனுமதி..

ஆபரேஷன் சிந்தூர்! புல்வாமா தாக்குதலுக்கு மூளையான பயங்கரவாதி அப்துல் ரவூப் அசார் கொலை..!

ஆபரேஷன் சிந்தூர் வெற்றி.. மும்பை சித்தி விநாயகர் கோவிலில் சிறப்பு பூஜை..!

சிந்தூர் என்பது ஒரு மதத்திற்கு தொடர்புடையது.. வேறு பெயர் வையுங்கள்: காங்கிரஸ்..

அதள பாதாளத்திற்கு சென்ற பங்குகள்.. கராச்சி பங்குச்சந்தையை மூட உத்தரவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments