கடந்த சில நாட்களாக பங்குச்சந்தை ஏற்ற இறக்கத்தில் இருந்தது என்பதும் குறிப்பாக இறக்கத்தில் தான் அதிக நாட்கள் இருந்தது என்பதையும் பார்த்து வருகிறோம்
இந்த நிலையில் இன்று பங்குச்சந்தை தொடங்கியவுடன் சுமார் ஆயிரம் புள்ளிகளுக்கு மேல் சரிந்துள்ளது முதலீட்டாளர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 1000 புள்ளிகளுக்கு மேல் சரிந்து 57100 என்ற புள்ளியில் வர்த்தகமாகி வருகிறது
அதேபோல் தேசிய பங்குச்சந்தை நிப்டி 300 புள்ளிகளுக்கும் மேல் சரிந்து 17,000 என்ற அளவில் வர்த்தகமாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
ஏற்கனவே கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் ஆயிரம் புள்ளிகளுக்கு மேல் சென்செக்ஸ் சரிந்த நிலையில் தற்போது மீண்டும் ஆயிரம் புள்ளிகளுக்கு மேல் சார்ந்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது