Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எதிர்பார்த்தது பவுண்டரிகள், ஆனால் கிடைத்ததோ நோ பால்களும், வைட்களும்: சசிதரூர் எம்பி

Webdunia
புதன், 10 ஜூலை 2019 (07:52 IST)
பாஜக அரசு தாக்கல் செய்த பட்ஜெட்டில் பவுண்டர்களையும் சிக்ஸர்களையும் எதிர்பார்த்தோம். ஆனால் கிடைத்தது  நோ பால்களும், வைட்களும் தான் என காங்கிரஸ் எம்பி சசிதரூர் மத்திய பட்ஜெட் குறித்து கமெண்ட் அளித்துள்ளார்.
 
காங்கிரஸ் எம்பி சசிதரூர், கிரிக்கெட்டில் ஆர்வமுள்ளவர் என்பது அனைவரும் அறிந்ததே. உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி நடந்து வரும் இங்கிலாந்து மைதானத்திற்கே சென்று ஓரிரு போட்டிகளை அவர் நேரில் கண்டு ரசித்தார் என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் சமீபத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த மத்திய பட்ஜெட்டை கிரிக்கெட்டுடன் ஒப்பிட்டு அவர் தனது கருத்தை தெரிவித்துள்ளார். தேர்தலுக்கு பின் பாஜக அரசின் முதல் பட்ஜெட்டில் அட்டகாசமான பவுண்டரிகளையும், சிக்ஸர்களையும் எதிர்பார்த்தோம். ஆனால் இந்த பட்ஜெட்டில் ஸ்ட்ரோக்குகளும், விடுபட்ட கேட்சுகளும், நோ பால்களும், வைட்களும் தான் இருந்தன.


எனவே சுவாரஸ்யம் இல்லாத ஒரு கிரிக்கெட் போட்டியை பார்த்தது போல் இருந்தது இந்த பட்ஜெட் இதனால் பொதுமக்களுக்கு கிடைத்த்து ஏமாற்றமே என்று சசிதரூர் எம்பி கூறினார்.  பட்ஜெட்டையும் கிரிக்கெட்டையும் ஒப்பிட்டு சசிதரூர் தெரிவித்த கருத்துக்கு நெட்டிசன்கள் வரவேற்பு அளித்து வருகின்றனர்,

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று இரவு 8 மாவட்டங்களை குளிர்விக்கப் போகும் மழை! - எந்தெந்த மாவட்டங்கள்?

தண்டவாளத்தில் சமையல் சிலிண்டர்.. நூல் இழையில் ரயிலை நிறுத்திய லோகோ பைலட்!

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

கங்கையில் வரலாறு காணாத வெள்ளம்: பல ரயில்கள் ரத்து, இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கர்நாடக பால் கூட்டமைப்பில் இருந்து நெய் கொள்முதல்.. திருப்பதி தேவஸ்தானம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments