குஜராத் தேர்தல் பாஜகவுக்கு பெரும் சவாலாக இருக்கும் என்று அக்கட்சியின் எம்.பி.சத்ருகன் சின்ஹா கூறியுள்ளார்.
காங்கிரஸ் மூத்த தலைவர் மனிஷ் திவாரி எழுதிய புத்தகம் தொடர்பான கலந்துரையாடல் தில்லியில் நடைபெற்றது. அதில் பாஜக மூத்த தலைவரும்.எம்.பி.யுமான சத்ருகன் சின்ஹா கலந்துகொண்டார். அப்போது அவர் பேசுகையில்,
வக்கீல் ( நிதியமைச்சர் அருண்ஜெட்லி) பொருளாதாரம் குறித்து பேசும்போது, சின்னத் திரை நடிகை (ஸ்மிருதி இரானி) மத்திய அமைச்சராக இருக்கும்போதும், தேனீர் விற்றவரால் (பிரதமர் மோடி) நாட்டின் உயர் பதவியை வகிக்க முடியும்போது, பொருளாதாரம் குறித்து நான் ஏன் பேசக்கூடாது. பண மதிப்பிழப்பு நடவடிக்கைகள். ஜிஎஸ்டி. ஆகியவற்றின் காரணமாக மத்திய அரசு மீது மக்கள் கோபத்தில் இருக்கிறார்கள். பலர் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகிறார்கள். இந்த சூழ்நிலையில் நடைபெற உள்ள குஜராத் தேர்தலை சாதாரணமாக எடுத்துக் கொள்ளக்கூடாது. இந்த தேர்தல் பாஜகவுக்கு பெரும் சவாலாகவே இருக்கும் என்பதே உண்மை என்உ பேசினார்.
பாஜகவைச் சேர்ந்தவர் என்றாலும் சமீபகாலமாக அக்கட்சியை கடுமையாக விமர்சனம் செய்து வருபவர் சத்ருகன் சின்ஹா என்பது குறிப்பிடத்தக்கது.