ஷிரடி சாய்பாபா கோவிலை தேதி குறிப்பிடாமல் மூடி வைக்க அறக்கட்டளை உறுப்பினர்களிடமிருந்து அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
நீண்டகாலமாகவே ஷீர்டி சாய்பாபாவின் பிறப்பிடம் எது என்பது குறித்த சர்ச்சை இருந்து வரும் நிலையில், பத்ரிதான் சாய்பாபாவின் பிறப்பிடம் என்று மகாராஷ்டிரத்தை ஆளும் சிவசேனா கூறி வருகிறது.
மேலும், பத்ரியின் வளர்ச்சிப் பணிகளுக்காக உத்தவ் தாக்கரே 100 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியுள்ளார். இதனால் அதிருப்தியில் உள்ள ஷிர்டி அறக்கட்டளை. உத்தவ் தாக்ரேவின் செயலுக்கு கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளது.
அதோடு, ஷிரடி சாய்பாபாவின் பிறப்பிடம் பத்ரி என்று கூறிய உத்தவ் தாக்கரேவுக்கு எதிராக நாளை முதல் ஷீர்டி சாய்பாபா கோவிலை மூடி எதிர்ப்புத் தெரிவிக்க கோவில் அறக்கட்டளை உறுப்பினர்களிடமிருந்து அழைப்பும் விடுக்கப்பட்டுள்ளது.