Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாட்டுக்கறி தின்ன கூடாதுன்னு சொல்ல நீங்க யார்? – முன்னாள் முதல்வர் ஆவேசம்!

Webdunia
செவ்வாய், 24 மே 2022 (15:39 IST)
கர்நாடகாவில் மாட்டிறைச்சிக்கு தடை விதிக்கப்படுவது தொடர்பாக முன்னாள் முதல்வர் சித்தராமையா கண்டனம் தெரிவித்து பேசியுள்ளார்.

கர்நாடகாவில் ஹிஜாப் சர்ச்சையை தொடர்ந்து இந்து கோவில்கள் அருகே இஸ்லாமிய கடைகள் செயல்பட தடை போன்ற பல கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது. அதுபோல பல பகுதிகளில் மாட்டிறைச்சிக்கு தடை விதிக்கப்படுவதற்கு எதிர்ப்பு எழுந்துள்ளது.

இதுகுறித்து கண்டனம் தெரிவித்து பேசியுள்ள முன்னாள் முதல்வர் சித்தராமையா “நான் ஒரு இந்து, இதுவரை மாட்டிறைச்சி சாப்பிட்டதில்லை. ஆனால் நான் விரும்பினால் மாட்டிறைச்சி சாப்பிடுவேன். என்னை மாட்டுக்கறி உண்ணக்கூடாது என சொல்ல நீங்கள் யார்? ஒரு குறிப்பிட்ட சமூகத்தினர் மட்டும் மாட்டுக்கறியை உண்பதில்லை. இந்துக்களும், கிறிஸ்தவர்களும் கூட உண்கிறார்கள்” என்று கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஐடி கார்டு வாங்கி இந்து என உறுதி செய்த பின்னரே சுட்டார்கள்.. காஷ்மீர் தாக்குதலில் அதிர்ச்சி தகவல்..!

காஷ்மீர் சுற்றுலா பயணிகள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல்.. 20 பேர் பலி.. மோடி-அமித்ஷா அவசர ஆலோசனை..!

LICக்கு திடீரென கிடைத்த ஜாக்பாட்.. ஒரே பங்கில் கோடிக்கணக்கில் லாபம்..!

மறைந்த போப் உடல்.. முதல்முறையாக வெளியிட்ட வாடிகன் நிர்வாகம்..!

டாஸ்மாக் ஊழியர்களுக்கு சம்பள உயர்வு.. எத்தனை ஆயிரம்? அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments