கர்நாடக மாநிலத்தில் சித்தராமையா மற்றும் டி கே சிவக்குமார் ஆகிய இருவருக்கும் 2 1/2 ஆண்டுகளுக்கு சுழற்சி முறையில் முதல்வர் பதவி தர காங்கிரஸ் மேலிடம் திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன.
கர்நாடக மாநிலத்தில் நடந்த சட்டப்பேரவை தேர்தலின் முடிவு வெளியாகி ஒரு வாரம் ஆகிவிட்டபோதிலும் இன்னும் முதலமைச்சர் யார் என்பது காங்கிரஸ் மேலிடம் தேர்வு செய்ய முடியாமல் உள்ளது.
டி கே சிவக்குமார் மற்றும் சித்தராமையா ஆகிய இருவருமே தங்களுக்கு முதல்வர் பதவி வேண்டும் என்று பிடிவாதமாக இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் காங்கிரஸ் மேலிடம் அதிரடி திட்டம் தீட்டி உள்ளதாக கூறப்படுகிறது.
அதன்படி கர்நாடக மாநில முதலமைச்சர் பதவியை சுழற்சி முறையில் வழங்க திட்டமிட்டுள்ளதாகவும் முதல் இரண்டரை ஆண்டுகள் சித்தராமையா , எஞ்சிய இரண்டரை ஆண்டுகள் டி கே சிவக்குமாரையும் முதலமைச்சராக்க திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.