சாராயம் காய்ச்சுபவருக்கே நிவாரண உதவி கொடுக்கும் கோமாளி அரசுதான் தற்போது நடைபெற்று வருகிறது என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
சாராயம் காச்சுபவர்களை கைது செய்து தண்டிப்பதற்கு பதிலாக அவர்களுக்கு நிவாரண உதவி வழங்கிய கோமாளி அரசாக இந்த அரசு உள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
ஏற்கனவே தந்தை மகன் ஆகிய இருவரையும் மாற்றுத்திறனாளி ஒருவர் உலகக் கோப்பையை வென்றதாக ஒரு டூப்ளிகேட் கோப்பையை காண்பித்து ஏமாற்றினார். அதேபோல் தற்போது சாராயம் காய்ச்சுபவர் சாராயம் குடித்ததாக நிவாரண உதவி தொகை பெற்றுள்ளார் என்றும் இப்படிப்பட்ட கோமாளிகள் மற்றும் அறிவில்லாதவர்கள் ஆட்சி தான் தற்போது நடைபெற்று வருகிறது என்றும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்
பல்பீர்சிங் வழக்கை விசாரிப்பதற்காக அமுதா ஐஏஎஸ் நியமனம் செய்யப்பட்டிருந்தார். இப்போது அதே அமுதா ஐஏஎஸ் தான் உள்துறைச் செயலாளராக நியமனம் செய்யப்பட்டிருக்கிறார். அப்போது அந்த அறிக்கையை எந்த லட்சணத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை புரிந்து கொள்ளுங்கள் என்றும் அவர் கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்தார்