Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டெல்லி காங்கிரஸ் தலைவராகும் பிரபல கிரிக்கெட் வீரர்

Webdunia
புதன், 31 ஜூலை 2019 (20:07 IST)
பிரபல முன்னாள் கிரிக்கெட் வீரர் நவ்ஜோத் சிங் சித்து அவர்கள் பஞ்சாப் அரசியலில் கடந்த சில வருடங்களாக ஈடுபட்டு வருகிறார் என்பது தெரிந்தே. ஆனால் பஞ்சாப் மாநில முதல்வருக்கும் சித்துவிற்கு இடையே கடந்த சில மாதங்களாக கருத்து மோதல்கள் நிலவி வந்த நிலையில் சமீபத்தில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்காக சித்து தீவிரமாக பிரச்சாரம் செய்தார். அப்போது ராகுல் காந்தி அமேதியில் தோல்வி அடைந்தால் நான் அரசியலை விட்டே விலகுகிறேன் என்று கூறியிருந்தார் 
 
இந்த நிலையில் ராகுல் காந்தி அமைதியில் தோல்வி அடைந்ததை அடுத்து தனது பதவியை ராஜினாமா செய்வதாக பஞ்சாப் முதல்வருக்கு கடிதம் ஒன்றை அனுப்பினார். அவரது ராஜினாமாவை பஞ்சாப் முதலமைச்சரும் ஏற்றுக் கொள்வதாக அறிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் டெல்லி மாநில தலைவராக சித்து நியமனம் செய்ய வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவராக இருந்த ஷீலா தீட்சித் சமீபத்தில் மறைந்த நிலையில் டெல்லியில் காங்கிரஸ் கட்சிக்கு புத்துணர்ச்சி கொடுக்கவும், ஷீலாவின்  இடத்தை நிரப்பும் வகையிலும் அவருக்கு இந்த பதவி கொடுக்கப்பட உள்ளதாக காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. எனவே விரைவில் சித்து டெல்லி காங்கிரஸ் தலைவராக பதவி ஏற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாகிஸ்தான் ராணுவத்தின் மீது தாக்குதல் நடத்திய உள்ளூர் தீவிரவாதிகள்.. பலர் உயிரிழப்பு..!

இன்று இரவு 30 மாவட்டங்களில் கனமழை: வானிலை எச்சரிக்கை..!

துருக்கி ஆப்பிள்களை மக்களே புறக்கணிக்கின்றனர்.. வியாபாரிகள் தகவல்..!

பொள்ளாச்சி வழக்கின் தீர்ப்பு நாளில் இளம்பெண் கூட்டு பலாத்காரம்.. வெளியே வராத செய்தி..!

இன்று மாலை 6 மணிக்கு மெழுகுவர்த்தி ஏற்ற வேண்டும்: நிர்வாகிகளுக்கு தவெக அறிவுறுத்தல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments