Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வயநாட்டிலும் ராகுல்காந்தியை துரத்தும் ஸ்மிருதி இரானி! காங்கிரஸ் அதிர்ச்சி

Webdunia
வெள்ளி, 19 ஏப்ரல் 2019 (22:29 IST)
காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, உத்தரபிரதேச மாநிலத்தின் அமேதி தொகுதியில் போட்டியிடுவதாக அறிவித்தார். அந்த தொகுதியில் பாஜக, மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானியை வேட்பாளராக அறிவித்ததும், ராகுல்காந்தியின் வெற்றி கேள்விக்குறியானதாக கூறப்பட்டது.
 
இதனையடுத்து ராகுல்காந்தி, கேரள மாநிலம் வயநாடு தொகுதியிலும் போட்டியிடுவதாக அறிவித்தார். அமேதியில் தோல்வி கிடைக்கும் என்று பயந்தே ராகுல்காந்தி வயநாட்டில் போட்டியிடுவதாக பாஜக உள்ளிட்ட கட்சிகள் விமர்சனம் செய்தன
 
இந்த நிலையில் 3வது கட்ட தேர்தல் வரும் 23ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதில் கேரள மாநில வயநாடு தொகுதியும் ஒன்று. இங்கு தேர்தல் பிரச்சாரம் நாளை மாலையுடன் முடிவடைவதை அடுத்து அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரம் செய்து வருகின்றனர்.
 
இந்த நிலையில் வயநாடு தொகுதிக்கு மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி தேர்தல் பிரச்சாரம் செய்யவிருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. ராகுல்காந்தி எந்த தொகுதியில் போட்டியிட்டாலும் அவரை தோற்கடிக்க பிரச்சாரம் செய்வேன் என்று ஸ்மிருதி இரானி கூறி வருவதால் காங்கிரஸ் அதிரச்சி அடைந்துள்ளது. இந்த நிலையில் வயநாடு தொகுதியில் பிரியங்கா காந்தி டேரா போட்டு தீவிர பிரச்சாரம் செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அனைவருக்கும் ரூ.1000 என்பது திமுக அரசின் நாடகம்: டாக்டர் ராமதாஸ்

பட்டப் பகலில் அரங்கேறும் குற்றச் செயல்கள்.. கத்திக்குத்து சம்பவம் குறித்து தவெக விஜய்..!

என் மகன் செய்தது தப்புதான், ஆனால் மருத்துவர் என்னை திட்டுவார்: கத்தியால் குத்திய விக்னேஷ் தாய் பேட்டி..!

அமைச்சர் பேச்சுவார்த்தை எதிரொலி: மருத்துவர்கள் போராட்டம் வாபஸ்..!

அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ரூ.1000 மகளிர் உதவித்தொகை: அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்

அடுத்த கட்டுரையில்
Show comments