Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இதுதான் பாஜக, பெருமை கொள்கிறோம்: : உதவியாளர் உடலை சுமந்த ஸ்மிருதி இரானி குறித்து தமிழிசை

Webdunia
திங்கள், 27 மே 2019 (06:50 IST)
இதுதான் பாஜக, பெருமை கொள்ரோம்: உதவியாளர் உடலை சுமந்த ஸ்மிருதி இரானி குறித்து தமிழிசை
 
உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள அமேதி தொகுதியில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியை எதிர்த்து போட்டியிட்ட அமைச்சர் ஸ்மிருதி இரானி, அவரை தோற்கடித்து அபார வெற்றி பெற்றார். ஆனால் இந்த வெற்றியை அவர் கொண்டாடும் முன்னரே நேற்று முன் தினம் அவரது உதவியாளர் சுரேந்தர் சிங், மர்ம நபர்களால் சுட்டு கொலை செய்யப்பட்டார். 
 
இதனையடுத்து சுரேந்தர்சிங் மனைவியை சந்தித்து ஆறுதல் கூறிய ஸ்மிருதி இரானி, கொலையாளிகளை நீதியின் முன் நிறுத்துவதாக சூளுரைத்தார். மேலும் சுரேந்தர்சிங் குழந்தைகளின் படிப்புக்கு தான் உதவுவதாகவும் அவர் வாக்குறுதி அளித்தார். மேலும் தான் சுரேந்தர்சிங் குடும்பத்தினர் முன் தான் பதவியேற்கவுள்ளதாகவும் ஸ்மிருதி இரானி செய்தியாளர்களிடம் தெரிவித்தார். 
 
அதுமட்டுமின்றி அமேதியில் சுட்டுக்கொல்லப்பட்ட தனது உதவியாளர் சுரேந்தர் சிங்கின் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்ட ஸ்மிருதி இரானி, அவரது உடலை சுமந்து சென்ற நால்வரில் ஒருவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. அமேதியின் பரவுளி பகுதியில் சுட்டுக்கொல்லப்பட்ட சுரேந்தர்சிங் கொலை குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். 
 
இந்த நிலையில் உதவியாளர் உடலை சுமந்து சென்ற ஸ்மிருதி இரானி குறித்து தமிழிசை செளதிரராஜன் கூறியபோது, 'அரசியல் காரணங்களால் படுகொலை செய்யப்பட்ட பாஜக தொண்டர் உடலை தன் தோளில் சுமந்து சென்று இறுதி அஞ்சலி செய்யும் பாஜகவின் மத்திய அமைச்சர், இதுதான் பாஜக ! பெருமை கொள்வோம் எங்கள் கட்சி! எங்கள் கட்சி! எங்கள் தொண்டனுக்கும் மக்களுக்கும் என்றும் தொண்டாற்றும் கட்சி' என்று கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மூச்சுவிட முடியாமல் பிறந்த பச்சிளம் குழந்தை இறந்த விவகார்ம: மருத்துவர் சஸ்பெண்ட்..!

6 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை.. வளர்ப்பு தந்தைக்கு மரண தண்டனை..!

நானும் திராவிடன் தான்: முதல்வர் ஸ்டாலினை சந்தித்த பின் எஸ்.வி.சேகர் பேட்டி..!

இன்று தான் விஸ்தாரா விமானங்களுக்கு கடைசி நாள்.. ஏன் தெரியுமா?

சொந்த செலவில் கல்வி உதவித்தொகை வழங்கிய விஜய்வசந்த் எம்பி.. எத்தனை லட்சம் தெரியுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments