Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திகார் சிறையில் ப.சிதம்பரத்தை சந்திக்கும் சோனியாகாந்தி - மன்மோகன்சிங்!

Webdunia
திங்கள், 23 செப்டம்பர் 2019 (08:35 IST)
ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் தொடர்புடையதாகக் கூறி கடந்த ஆகஸ்டு 21-ஆம் தேதி முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம், சிபிஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். சிபிஐ காவலில் இருந்து வந்த ப.சிதம்பரம் செப்டம்பர் 5-ஆம் தேதி நீதிமன்ற உத்தரவின்படி திகார் சிறையில் அடைக்கப்பட்டார். 
 
 
இந்த நிலையில் 14 நாட்கள் சிறைவாசம் செப்டம்பர் 19ஆம் தேதி முடிவடைந்த நிலையில் மீண்டும் சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட ப.சிதம்பரம் அவர்களை அக்டோபர் 3 ஆம் தேதி வரை சிறைகாவலை நீட்டித்து சிபிஐ நீதிமன்றம் உத்தரவிட்டது. எனவே மீண்டும் அவர் திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.
 
 
இந்த நிலையில் டெல்லி திகார் சிறையில் உள்ள ப.சிதம்பரத்தை இன்று காலை 9 மணிக்கு முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆகியோர் சந்திக்கவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. இந்த சந்திப்பில் சில முக்கிய ஆலோசனைகள் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஜனவரி மாதமே பஹல்காம் சென்ற கைதான யூடியூபர் ஜோதி மல்ஹோத்ரா.. திடுக்கிடும் தகவல்..!

சிறந்த எம்பிக்களாக 17 பேர் தேர்வு.. அதில் ஒருவர் திமுக எம்பி..!

3 மாடி நகைக்கடை கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து.. 10 பேர் பரிதாப பலி..!

திடீரென தாக்கிய இடி - மின்னல்.. 3 கிரிக்கெட் வீரர்கள் பரிதாப பலி..!

இஸ்ரேல் போருக்கு AI தொழில்நுட்பம் வழங்கி உதவிய மைக்ரோசாப்ட்.. குவியும் கண்டனங்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments