Webdunia - Bharat's app for daily news and videos

Install App

படிக்காமல் எந்நேரமும் மொபைல் மோகம்..! தட்டிக்கேட்ட தாயை அடித்துக் கொன்ற மாணவன்!

Prasanth Karthick
வெள்ளி, 7 மார்ச் 2025 (10:44 IST)

மத்திய பிரதேசத்தில் படிக்காமல் செல்போன் பார்த்துக் கொண்டிருந்ததை கண்டித்த தாயை மகன் அடித்தே கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

மாணவர்களிடையே செல்போன் பழக்கத்துக்கு அடிமையாகும் சம்பவம் அதிகரித்து வரும் நிலையில், அதனால் ஒரு சோக சம்பவம் மத்திய பிரதேசத்தில் நடந்துள்ளது. மத்திய பிரதேசத்தின் பால்கட் மாவட்டத்தை சேர்ந்தவர் கிஷோர் காட்ரே. இவரக்கு ப்ரதீபா காட்ரே என்ற மனைவியும், சத்யம் காட்ரே என்ற மகனும் உள்ளனர்,

 

சத்யம் காட்ரே கடந்த சில காலமாக நீட் நுழைவுத்தேர்வுக்காக கோட்டாவில் உள்ள தனியார் பயிற்சி மையத்தில் படித்து வந்துள்ளார். இந்நிலையில் அவர் படிக்காமல் அடிக்கடி செல்போனையே பார்த்துக் கொண்டிருந்ததாக தெரிகிறது. இதனால் அவரது தாயார் ப்ரதீபா அவரை கண்டித்த நிலையில், ஆத்திரமடைந்த சத்யம், தனது தாயை தாக்கியுள்ளார். இதில் தலையில் அடிப்பட்டு ப்ரதீபா பரிதாபமாக பலியானார்.

 

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீஸார் சத்யமை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஐபிஎல் டிக்கெட் கள்ளச்சந்தை விற்பனை! 11 பேரை டிக்கெட்டும் கையுமாக கைது செய்த போலீஸ்!

Rain alert: கோடையை குளிர்விக்கும் மழை.. இன்று 5 மாவட்டங்களில் மழை வாய்ப்பு!

ஆப்பு வைத்த அதிபர் ட்ரம்ப்! சூப்பர்மார்கெட்டை கபளீகரம் செய்த அமெரிக்க மக்கள்! - ஒரே வரியில் கதிகலங்கிய அமெரிக்கா!

ஜீப்லி புகைப்படம் உருவாக்குகிறீர்களா? காவல்துறையின் முக்கிய எச்சரிக்கை..!

வக்பு மசோதா நிறைவேற்றம்.. அடுத்த டார்கெட் கிறிஸ்துவர்கள் தான்: ராகுல் காந்தி

அடுத்த கட்டுரையில்
Show comments