Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இறுதியாண்டு தேர்வுகளை ரத்து செய்ய முடியாது – உச்ச நீதிமன்றம்!

Webdunia
வெள்ளி, 28 ஆகஸ்ட் 2020 (11:08 IST)
கல்லூரி இறுதியாண்டு தேர்வுகளை ரத்து செய்ய கோரி மாணவர்கள் தொடர்ந்த வழக்கில் தேர்வை ரத்து செய்ய முடியாது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

கொரோனா காரணமாக கல்லூரிகள் மூடப்பட்ட நிலையில் செமஸ்டர் தேர்வுகளில் இறுதியாண்டு தேர்வுகளை தவிர்த்த மற்ற செமஸ்டர் தேர்வுகள் எழுத இருந்த மாணவர்களுக்கு தேர்வின்றி தேர்ச்சி அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கொரோனா காரணமாக பாடங்கள் நடத்தப்படாததாலும், தேர்வு எழுதும் சூழல் தற்போது இல்லாததை கருத்தில் கொண்டும் இறுதி ஆண்டு செமஸ்டர் தேர்வுகளையும் ரத்து செய்ய வேண்டும் என மாணவர்கள் சார்பில் உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் கல்லூரி இறுதியாண்டு தேர்வை ரத்து செய்ய உத்தரவிட முடியாது என்று கூறி மாணவர்களின் மனுவை தள்ளுபடி செய்துள்ளது. மேலும் யுஜிசி உத்தரவுக்கு எதிராக மாநில அரசுகள் மாணவர்களுக்கு தேர்வின்றி தேர்ச்சி அளிக்க முடியாது என்றும், பாடங்கள் நடத்தாமல் இருப்பதாக கூறுவதால் தேர்வு தேதியை வேண்டுமானால் ஒத்திவைக்க யுஜிசியிடம் மாநில அரசுகள் வலியுறுத்தலாம் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காணாமல் போன ‘அன்னாபெல்’ பேய் பொம்மை.. அடுத்தடுத்து நடக்கும் துர் சம்பவங்கள்! - பீதியில் உறைந்த மக்கள்!

ரெய்டுகளுக்கு பயந்து கட்சியை அடமானம் வைத்த ஈபிஎஸ்! முதல்வர் முக ஸ்டாலின்

இடியை கண்டாலும் பயம் இல்லை என்று கூறியவர் வெளிநாடு தப்பிச்சென்றது ஏன்? ஈபிஎஸ் கேள்வி

பாகிஸ்தானை ஓட ஓட விரட்டிய ராக்கெட் லாஞ்சர்கள்.. இந்தியாவிடம் ஆர்டர் கொடுத்த இஸ்ரேல்..!

கனமழை எச்சரிக்கை: சதுரகிரிக்கு செல்ல பக்தர்களுக்கு தடை! - வனத்துறை உத்தரவு!

அடுத்த கட்டுரையில்
Show comments