கொரோனா தடுப்பூசி விலையில் வெவ்வேறு விலைகள் இருப்பது குறித்து உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
இந்தியா முழுவதும் கொரோனா தடுப்பூசி மத்திய அரசுக்கு ஒரு மாதிரியாகவும், மாநில அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு ஒரு மாதிரியாகவும் விற்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இதுகுறித்து மத்திய அரசு விலை நிர்ணயத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. மேலும் அதிக விலை கொடுப்பவர்களுக்கு தடுப்பூசி முதலில் கிடைக்கும் என்ற சூழல் உருவாகி உள்ளது எனக் கூறியுள்ளது.