ஆட்சி அமைக்கவுள்ள திமுக அமைச்சரவையில் உதயநிதி ஸ்டாலினும் இடம்பிடிக்க வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.
நடந்து முடிந்த தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணி 159 இடங்களிலும், அதிமுக கூட்டணி 75 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. தனிப்பெரும்பாண்மை பெற்றுள்ள திமுக மே 7 ஆம் தேதி முதல் ஆட்சி அமைக்க உள்ளது. திமுக தலைவர் ஸ்டாலினோடு இணைந்து அப்போது அமைச்சர்களும் பதவியேற்பார்கள் என தெரிகிறது.
இந்நிலையில் அமைச்சரவையில் மு க ஸ்டாலினின் மகன் உதயநிதிக்கு உள்ளாட்சித்துறை அமைச்சர் பதவி வழங்கப்படும் என சொல்லப்படுகிறது. இதுபற்றி கேள்வி எழுப்பியபோது இன்னும் 4 நாட்களில் தெரிந்துவிடும் எனக் கூறி எஸ்கேப் ஆகியுள்ளார்.