Webdunia - Bharat's app for daily news and videos

Install App

9 ஆண்டுகளாக நடைபெற்ற பத்மநாபசுவாமி கோயில் வழக்கு: உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

Webdunia
திங்கள், 13 ஜூலை 2020 (11:15 IST)
9 ஆண்டுகளாக நடைபெற்ற பத்மநாபசுவாமி கோயில் வழக்கு
திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோயிலை திருவிதாங்கூர் மன்னர் குடும்பம் நிர்வகிக்கலாம் என  உச்சநீதிமன்ற நீதிபதிகள் லலித், இந்து மல்கோத்ரா அமர்வு அதிரடி தீர்ப்பு அளித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
மேலும் கோயிலை நிர்வகிக்க இடைக்கால ஏற்பாடாக திருவனந்தபுரம் மாவட்ட நீதிபதி தலைமையில் குழு அமைக்கவும் ஒப்புதல் தரப்பட்டுள்ளது. புதிதாக நிர்வாக குழு அமைக்கும் வரை, நீதிபதி தலைமையிலான குழு கோயிலை நிர்வகிக்கும் என்றும் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது
 
கேரள உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து திருவிதாங்கூர் மன்னர் குடும்பம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்த நிலையில் இந்த வழக்கு கடந்த ஒன்பது ஆண்டுகளாக நடைபெற்றது. 9 ஆண்டுகளாக நடைபெற்று வந்த சட்டபோராட்டத்திற்கு இன்று தீர்ப்பளித்தது உச்சநீதிமன்றம்
 
கோயில் நிலவறைகளில் உள்ள பல லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான நகைகளை கணக்கிட ஏற்கனவே உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது என்பதும் இதனையடுத்து 5 நிலவறைகள் திறக்கப்பட்டு கணக்கிடப்பட்டதில் ஆபரணங்களின் மதிப்பு 1.5 லட்சம் கோடி ரூபாய் என தெரியவந்தது என்பதும் தெரிந்ததே

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முதல்வரா இருந்தாலும் ஸ்கூட்டி பெண்களிடம் ஜாக்கிரதையா இருக்கணும்! மயிரிழையில் தப்பிய முதலமைச்சர்! - வைரல் வீடியோ

தவெக மாநாடு: 2 நாட்களில் சுமார் 10 கோடி ரூபாய் வரை மது விற்பனை.. அதிர்ச்சி தகவல்..!

வெடித்து சிதறிய குடோன்! தூக்கி வீசப்பட்ட மக்கள்! - காசர்கோடு திருவிழாவின் அதிர்ச்சி வீடியோ!

பொது சேவை செய்ய என்னை அன்னை தெரசா அழைத்தார்: வயநாடு பிரச்சாரத்தில் பிரியங்கா..!

பூமிக்கு திரும்ப முடியாத நிலை! விண்வெளியில் இருந்து தீபாவளி வாழ்த்து சொன்ன சுனிதா வில்லியம்ஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments