Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஹிஜாப் விவகாரத்தை தேசிய பிரச்சினையாக்க வேண்டாம்! – உச்சநீதிமன்றம் வேண்டுகோள்!

Webdunia
வெள்ளி, 11 பிப்ரவரி 2022 (12:45 IST)
கர்நாடகத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள ஹிஜாப் விவகாரத்தை தேசிய பிரச்சினையாக்க வேண்டாம் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

கர்நாடகாவில் கல்வி நிலையங்களில் ஹிஜாப் அணிந்து செல்ல விதிக்கப்பட்ட தடை மற்றும் அதை தொடர்ந்த போராட்டங்கள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன. ஹிஜாப் தடையை எதிர்த்து இஸ்லாமிய பெண்கள் போராட்டம் நடத்திய நிலையில், அவர்களை எதிர்த்து மாணவர்கள் மற்றும் சிலர் காவித்துண்டு அணிந்து போராட்டம் செய்வது போன்ற நிகழ்வுகளால் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஹிஜாப் விவகாரம் தொடர்பாக மாணவிகள் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. ஆனால் மேல்முறையீட்டு மனுவை உடனே விசாரிக்க முடியாது என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேலும் ஹிஜாப் விவகாரத்தை தேசிய பிரச்சினையாக்க வேண்டாம் என்றும், கர்நாடக நீதிமன்றம் வழக்கை விசாரித்து வருகிறது, தேவைப்பட்டால் உரிய நேரத்தில் தலையிடுவோம் என்றும் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அனைவருக்கும் ரூ.1000 என்பது திமுக அரசின் நாடகம்: டாக்டர் ராமதாஸ்

பட்டப் பகலில் அரங்கேறும் குற்றச் செயல்கள்.. கத்திக்குத்து சம்பவம் குறித்து தவெக விஜய்..!

என் மகன் செய்தது தப்புதான், ஆனால் மருத்துவர் என்னை திட்டுவார்: கத்தியால் குத்திய விக்னேஷ் தாய் பேட்டி..!

அமைச்சர் பேச்சுவார்த்தை எதிரொலி: மருத்துவர்கள் போராட்டம் வாபஸ்..!

அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ரூ.1000 மகளிர் உதவித்தொகை: அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்

அடுத்த கட்டுரையில்
Show comments