தி கேரளா ஸ்டோரி திரைப்படத்திற்கு தடை விதித்த மேற்குவங்க மற்றும் தமிழ்நாடு அரசுகளுக்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
சமீபத்தில் தி கேரளா ஸ்டோரி என்ற திரைப்படம் வெளியான நிலையில் தமிழகத்தில் உள்ள திரையரங்கு உரிமையாளர்கள் அந்த திரைப்படத்தை திரையிட மறுத்து விட்டதாக செய்திகள் வெளியானது.
மேலும் மேற்குவங்க அரசு இந்த படத்தை தடை செய்தது. இந்த நிலையில் தி கேரளா ஸ்டோரி தயாரிப்பாளர் சுப்ரீம் கோர்ட்டில் இது குறித்து வழக்கு பதிவு செய்த நிலையில் மேற்குவங்க மற்றும் தமிழ்நாடு அரசுக்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
மே 17ஆம் தேதிக்குள் இரு மாநில அரசுகளும் பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவு பெற்றுள்ளது. மற்ற மாநிலங்களில் இந்த படம் திரையிடும்போது மேற்குவங்கத்தில் மட்டும் தடை விதித்தது ஏன் என்றும் தமிழக திரையரங்குகள் இந்த படத்தை திரையிடாததற்கு என்ன காரணம் என்று சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் கேள்வி எழுப்பி உள்ளனர்.