இப்போது மக்களவைத் தேர்தல் நடைபெற்றால் ..? கருத்துக்கணிப்பில் ஆச்சரிய தகவல்..!

Webdunia
வெள்ளி, 18 ஆகஸ்ட் 2023 (07:41 IST)
இந்தியாவில் மக்களவைத் தேர்தல் அடுத்த ஆண்டு ஏப்ரல் அல்லது மே மாதம் நடைபெறும் என்ற நிலையில் இப்போதே அரசியல் கட்சிகள் தேர்தலை சந்திக்க தயாராகி வருகின்றன என்பதை பார்த்து வருகிறோம்.
 
குறிப்பாக எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து இந்தியா என்ற கூட்டணியை அமைத்துள்ளது என்பதும் இந்த கூட்டணி பாஜகவை வீழ்த்த அனைத்து வியூகங்களையும் செயல்படுத்தி வருகிறது என்றதும் குறிப்பிடத்தக்கது. 
 
ஆனால் இப்போது மக்களவை தேர்தல் நடந்தால் யார் வெற்றி பெறுவார்கள் என்ற கருத்துக்கணிப்பின் முடிவில் ஆச்சரியமாக பாஜக மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.’
 
 டைம்ஸ் நவ் நடத்திய இந்த கருத்துக்கணிப்பில் பாஜக கூட்டணி 296 முதல் 326 தொகுதிகள் வரை வெற்றி பெறும் என்றும் எதிர்க்கட்சிகள் கூட்டணி 160 முதல் 190 இடங்களில் வெற்றி பெறும் என்றும் கூறப்பட்டுள்ளது.  
 
ஆட்சி அமைக்க  தேவையான இடங்களை பாஜக கூட்டணி பெற்றுவிடும் என்ற இந்த கருத்துக்கணிப்பு இந்தியா கூட்டணி கட்சிகளுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 
 
தமிழகத்தை பொறுத்தவரை இந்தியா கூட்டணிக்கு 30 முதல் 34 தொகுதிகள் கிடைக்கும் என்றும் பாஜக கூட்டணிக்கு நான்கு முதல் எட்டு தொகுதிகள் கிடைக்கும் என்றும் இந்த கருத்து கணிப்பு தெரிவித்துள்ளது.  
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமித்ஷாவுன் சந்திப்பு ஏன்?.. ஓப்பனாக சொல்லிட்டாரே ஓபிஎஸ்!...

ஜெயலலிதா நினைவு நாளில் அஞ்சலி செலுத்திய தவெக கட்சியினர்.. செங்கோட்டையன் வரவால் மாற்றமா?

2வது நாளாக குறைந்த தங்கம் விலை.. ஆனாலும் ரூ.96,000க்கு குறையவில்லை..!

பங்குச் சந்தை நிலவரம்: சென்செக்ஸ், நிஃப்டி இன்று உயர்வு!

மூன்று முறை உத்தரவு பிறப்பித்தும் அதனை அரசு ஏன் நிறைவேற்றவில்லை? தமிழக அரசுக்கு நோட்டீஸ்..!

அடுத்த கட்டுரையில்
Show comments