Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாடு முழுவதும் 23% தடுப்பூசி வீணாக்கப்பட்டது; தமிழகம் முதலிடம் – மத்திய அரசு தகவல்

Webdunia
செவ்வாய், 20 ஏப்ரல் 2021 (13:10 IST)
இந்தியாவில் கொரோனா பாதிப்பு வேகமாக அதிகரித்து வரும் நிலையில் பல மாநிலங்களில் தடுப்பூசிகள் போடப்படாமல் வீணாக்கப்பட்டதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த மத்திய அரசால் கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு ஆகிய தடுப்பூசிகள் அவசர கால தடுப்பூசிகளாக பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் தற்போது நாடு முழுவதும் கொரோனா அதிகரித்து வரும் நிலையில் தடுப்பூசிகளுக்கு பல மாநிலங்களில் தட்டுப்பாடு எழுந்துள்ளது.

இந்நிலையில் இந்தியா முழுவதும் தடுப்பூசி பயன்பாடு குறித்து தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட கேள்விக்கு மத்திய அரசு சார்பில் அளிக்கப்பட்டுள்ள விளக்கத்தில் நாடு முழுவதும் கடந்த ஏப்ரல் 11ம் தேதி வரை 44 லட்சம் தடுப்பூசிகள் வீணடிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதுவரையிலான மொத்த தடுப்பூசி விநியோகத்தில் இது 23% ஆகும். இதில் தமிழகத்தில் மட்டும் அதிகபட்சமாக 12.10% தடுப்பூசிகள் வீணடிக்கப்பட்டுள்ளதாகவும் அதில் கூறப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

4 மாவட்டங்களை குளிர்விக்க வருகிறது மழை! இன்றைய மழை வாய்ப்பு!

விஸ்வரூபமெடுக்கும் போர்..! 32 எல்லையோர இந்திய விமான நிலையங்கள் மூடல்!

ஜம்முவில் இடைவிடாத குண்டு வெடிப்புச் சத்தம்? மின்சாரம் துண்டிப்பு! - காஷ்மீர் முதல்வர் பதிவு!

கள்ளழகர் தரிசனத்திற்கு சிறப்பு ரயில் சேவை! - தெற்கு ரயில்வே அறிவிப்பு!

சீனாவை தொடர்ந்து துருக்கியிடம் வாங்கிய ட்ரோன்களும் பனால்! பாகிஸ்தானை இடது கையில் டீல் செய்யும் இந்தியா!

அடுத்த கட்டுரையில்
Show comments