தெலங்கானா மாநில முன்னாள் முதலமைச்சர் மகன், ஆளும் காங்கிரஸ் அரசு தனது வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என குற்றம் சாட்டி, திடீரென பாதயாத்திரை புறப்பட இருப்பதாக கூறப்படுவது தெலங்கானாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தெலங்கானா மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சியைப் பிடித்துள்ள நிலையில், அந்த கட்சி அளித்த ஆறு முக்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்று முன்னாள் ஆளுங்கட்சியான சந்திரசேகர ராவ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.
இதனைத் தொடர்ந்து, காங்கிரஸ் கட்சியின் ஆறு முக்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற கோரிக்கை விடுத்து, முன்னாள் முதலமைச்சர் சந்திரசேகர் ராவ் மகன் கே.டி. ராமராவ், மாநிலம் முழுவதும் பாதயாத்திரை செல்ல இருப்பதாக அறிவித்துள்ளார்.
காங்கிரஸ் அரசு தெலுங்கானா மாநிலத்திற்கு சாபமாக உள்ளது என்றும், காவல்துறை அதிகாரிகள் முதல் காவலர்கள் வரை துன்புறுத்தப்படுகிறார்கள் என்றும் கே.டி. ராமராவ் குற்றம் சாட்டியுள்ளார்.
காங்கிரஸ் அரசின் தோல்விகளை வெளிச்சம் போட்டு காட்டவும், மக்களை நேரடியாக சந்தித்து அவர்களின் குறைகளை கேட்கவும், தெலுங்கானா முதல்வர் பாதயாத்திரை மேற்கொள்ளப் போவதாக அவர் தெரிவித்துள்ளார். அவரது இந்த பாதயாத்திரை அறிவிப்பு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு காங்கிரஸ் என்ன பதில் அளிக்கப் போகிறது என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.