Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வளையல் சேலை அணியுங்கள் என கூறிய எம்.எல்.ஏ.. செருப்பை காண்பித்து பதிலடி..!

Mahendran
வியாழன், 12 செப்டம்பர் 2024 (11:52 IST)
தெலுங்கானா மாநிலத்தில் பி.ஆர்.எஸ்   கட்சியில் இருந்து விலகிய எம்எல்ஏக்கள் ஆண்கள் அல்ல, அவர்கள் சேலை மற்றும் வளையல் அணிந்து கொள்ள வேண்டும் என்று எம்எல்ஏ ஒருவர் கூறிய நிலையில் ,அவருக்கு பதிலடி கொடுத்த காங்கிரஸ் எம்எல்ஏ செருப்பை காண்பித்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தெலுங்கானா மாநிலத்தில் ஆளும் கட்சியாக இருந்த பி.ஆர்.எஸ்   கட்சி சமீபத்தில் நடந்த தேர்தலில் தோல்வி அடைந்து ஆட்சியை இழந்த நிலையில் அந்த கட்சியில் உள்ள எம்எல்ஏக்கள் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளில் இணைந்து வருகின்றனர்.

இதுவரை 10 எம்எல்ஏக்கள் பி.ஆர்.எஸ்  கட்சியில் இருந்து வெளியேறிய நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்த பி.ஆர்.எஸ்  கட்சியின் கௌசிக் ரெட்டி, பி.ஆர்.எஸ்   கட்சியிலிருந்து விலகிய எம்எல்ஏக்கள் ஆண்கள் அல்ல, அவர்கள் சேலை மற்றும் வளையல்களை அணிந்து கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார்.

இதற்கு பதிலடி கொடுத்த காங்கிரஸ் தலைவர் ஷோபா ராணி வளையல், சேலையை காண்பித்து பெண்களை இழிவுபடுத்தினால் உங்களுக்கு செருப்பை காண்பிப்பேன், மீண்டும்  இதே மாதிரி பேசினால் செருப்பால் அடிப்போம் என்று தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் பிஆர்எஸ் கட்சியிலிருந்து விலகிய எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று பி.ஆர்.எஸ்  தலைமை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

Edited by Mahendran
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அதிமுக என்ற இயக்கத்தை ரெய்டுகள் அசைத்து கூட பார்க்க முடியாது: ஈபிஎஸ்

அரசு ஊழியர்களை அமலாக்கத்துறை துன்புறுத்துகிறது: அமைச்சர் முத்துசாமி கண்டனம்..!

பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த கல்லூரி மாணவர் கைது.. ரகசிய தகவல் பரிமாறப்பட்டதா?

தமிழகத்தின் 14 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும்: வானிலை எச்சரிக்கை..!

ராயல் என்ஃபீல்டு அறிமுகம் செய்யும் முதல் மின்சார பைக்.. முழு விவரங்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments