Webdunia - Bharat's app for daily news and videos

Install App

10 வயது சிறுமியை மூன்று மாதமாக சீரழித்த 3 பேர் கைது...

Webdunia
சனி, 18 நவம்பர் 2017 (12:11 IST)
மத்திய பிரதேசத்தில் சிறுமியை மூன்று மாதமாக பாலியல் பலாத்காரம் செய்து வந்த மூவரை போலீசார் கைது செய்துள்ளது.


 

 
ம.பி. போபாலை சேர்ந்த 10 வயது சிறுமியை 65 வயது காவலாளி  ஒருவர் இனிப்பு வழங்கி தன்னுடைய நண்பன் வீட்டிற்கு அழைத்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். அதோடு, அந்த சிறுமியை அவரின் நண்பர்கள் கோகுல் பன்வால்(45), ஞானேந்தர் (36) ஆகிய இருவரும் சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.
 
கடந்த 3 மாதங்களாக அந்த சிறுமியை இதுபோல் சீரழித்து வந்துள்ளனர். சில நாட்களாக சிறுமி சோர்வாகவும், சோகமாகவும் இருப்பது கண்டு சிறுமியின் தாய் விசாரித்துள்ளார். அப்போது, தனக்கு நடந்த கொடுமை பற்றி சிறுமி கூறியுள்ளார். இதுகேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் தாய் போலீசாரிடம் புகார் அளித்தார்.
 
இதைத் தொடர்ந்து அவர்கள் மூவரையும் போலீசார் கைது செய்தனர். மேலும், அவர்களுக்கு உதவி செய்த மேலும் ஒருவரையும் போலீசார் தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு QR கோடு மூலம் விண்ணப்பம்.. அமைச்சர் பாராட்டு..!

வெள்ளத்தில் மிதக்கும் பெங்களூரு.. கோடிகள் செலவு செய்தும் பயனில்லை.. எதிர்க்கட்சிகள் கண்டனம்..!

இந்தியாவில் முதன்முறையாக 5.5ஜி ஸ்மார்ட்போன்.. அறிமுகமாகும் தேதி அறிவிப்பு..!

சென்னை காவல் ஆணையர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்ற பெண்: அதிர்ச்சி சம்பவம்..!

மின் கட்டணத்தை உயர்த்தும் எண்ணமிருந்தால்? நயினார் நாகேந்திரன் எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்