Webdunia - Bharat's app for daily news and videos

Install App

’ஏடிஎம்’ கார்டை உடைத்துப் போட வேண்டியதுதான் ! வங்கி அதிகாரிகள் தகவல்

Webdunia
செவ்வாய், 18 டிசம்பர் 2018 (10:22 IST)
நவீனத்திற்கு ஏற்ப ஒவ்வொரு துறையிலும் பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. அது மக்களுக்கு பயனுடையதுதான். அந்த வகையில் ஏடிஎம் கார்டுகளைப் பயன்படுத்துவோர் இனிமேல் மேக்னடிக் ஸ்டிரிப் முறையிலான டெபிட் கார்டுகளைப் பயன்படுத்த வேண்டாம் என்றும் அதில் பாதுகாப்பு அம்சங்கள் இல்லை என்றும். அதற்குப் பதிலாக சிப் பொருத்தப்பட்ட புதிய கார்டுகளை வரும் ஜனவரி முதல் அமல்படுத்த உத்தரவிட வேண்டும் என்று வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில் புதிய சிப் கார்டுகள் ஆக்டிவேட் செய்தாலும் கூட பழைய மேக்னெடிக் ஸ்டிரிப் கார்டுகள் செயலிழந்துவிடும் என்று வங்கி சார்பில் கூறப்பட்டது.
 
இந்நிலையில் புதிய  சிப் கார்டுகளைப் பெற்றும் கூட பழைய கார்டுகளில் பணம் வருவதாகவும் ,கார்டுகள் தொலைந்துபோனால் பணம் கள்வாடப்பட வாய்ப்புள்ளதாகவும் வாடிக்கையாளர்கள் புகார் அளித்த வண்ணம் இருந்தனர்.
 
இதனையடுத்து வங்கி அதிகாரிகள் கூறியதாவது : வங்கி வாடிக்கையாளர்கள் புதிய சிப் கார்டுகளை பயன்படுத்த ஆரம்பித்ததும் பழைய கார்டுகள் தானாக செயலிழந்துவிடும். ஆனால் சில சமயங்களில் தொழில்நுட்பக்கோளாறுகல் காரணமாக பழைய கார்டுகள் செயலிழக்காமல் இருக்கலாம் என்று தெரிவித்துள்ளார். 
 
மேலும் புதிய சிப் கார்டுகள் ஆக்டிவேட் ஆனதும் பழைய ஏடிஎம் கார்டை உடைத்துப் போட்டுவிட்டால் வாடிக்கையாளர்கள் பயமில்லாமல் இருக்கலாம் என்று வங்கி அதிகாரிகள் தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மூச்சுவிட முடியாமல் பிறந்த பச்சிளம் குழந்தை இறந்த விவகார்ம: மருத்துவர் சஸ்பெண்ட்..!

6 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை.. வளர்ப்பு தந்தைக்கு மரண தண்டனை..!

நானும் திராவிடன் தான்: முதல்வர் ஸ்டாலினை சந்தித்த பின் எஸ்.வி.சேகர் பேட்டி..!

இன்று தான் விஸ்தாரா விமானங்களுக்கு கடைசி நாள்.. ஏன் தெரியுமா?

சொந்த செலவில் கல்வி உதவித்தொகை வழங்கிய விஜய்வசந்த் எம்பி.. எத்தனை லட்சம் தெரியுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments