ஒடிசா மாநிலம் கலஹந்தி மாவட்டத்தில் உள்ள பவானிபட்டா என்ற பகுதியில் நுழைந்த
ஒரு கரடி அவ்வழியே வந்த ஒருவரை தாக்கியது. அவரது அலறைக் கேட்ட அருகில் உள்ளோர் .
வந்து கைத்தடிகள் கொண்டு கரடியை விரட்டி நபரை மீட்டனர்.
பின்னர் வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து அவர்கள் வந்து கரடியைப் பிடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.