பாஜக முக்கிய தலைவரும், முன்னாள் முதலமைச்சர், மத்திய அமைச்சர் என பல்வேறு பொறுப்புகளை வகித்தவருமான சுஷ்மா ஸ்வராஜ் நேற்று உடல்நலக் குறைவால் காலமானார். இறக்கும் முன்பு அவர் கடைசியாக வெளியிட்ட ட்விட்டர் செய்தி மனம் நெகிழ செய்வதாக இருக்கிறது.
முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சரான சுஷ்மா ஸ்வராஜ் ஒன்றுபட்ட தேச கொள்கையில் மிகுந்த தீவிரமாக இருந்தார். வெளிநாடு வாழ் இந்தியர்களின் உரிமைக்காக அரும்பாடுபட்டார். அவரது இரங்கலுக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட பலர் தங்களது அஞ்சலியை செலுத்தியுள்ளனர்.
நேற்று மாலை காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்துகளை நீக்கி அதை முழுவதுமாக இந்தியாவுடன் இணைப்பதற்கான மசோதா மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. இதுகுறித்து தன் ட்விட்டரில் செய்தி வெளியிட்ட சுஷ்மா ஸ்வராஜ் “நன்றி பிரதமர் அவர்களே! மிக மிக நன்றி.. இதை காணவே என் வாழ்நாள் முழுக்க காத்திருந்தேன்” என கூறியுள்ளார்.
சுஸ்மா சுவராஜ் பற்றிய சில முக்கிய நிகழ்வுகளை பார்க்கலாம்
மறைந்த முன்னால் முதல்வர் சுஸ்மா சுவராஜ் கடந்த பிப்ரவரி 1952 ஆக்ஸ்ட் மாதம் 6 ஆம் நாள் பிறந்தார். இவர் பாரதிய ஜனதா கட்சியின் மீது கொண்ட ஈடுபாடு காரணமாக அக்கட்சியில் இணைந்து அக்கட்சியில் முக்கிய பிரமுகராக இருந்தார். பின்னர் அரசியலில் பங்கேற்று மத்திய மாநில அரசுகளிலும் மிக முக்கிய பதவிகளை வகித்தார்.
இவரது சிறந்த நிர்வாகத் திறமை காரணமாக கடந்த 2014 ஆம் ஆண்டு மோடி தலைமையிலான பாஜக அரசில் மத்தியவெளியுறவுத்துறை அமைச்சராக பதவியேற்றார்.
இந்தப் பதவிக்கு மிகவும் பொறுத்தமானவராக திழந்த சுஷ்மா சுவராஜ் பல முக்கிய பிரச்சனைகளுக்கு தீர்வு கண்டார். அதனால் இவரை எல்லோருடைய பாராட்டுகளையும் பெற்றார். இந்த வருடம் மே 29 2019 வரை இப்பதவி வகித்தார்.
இந்நிலையில் நேற்று இரவு அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதால் காலமானார். இவரது மறைவு பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இவரது மறைவிற்கு பிரதமர் மோடி பாஜக கட்சியினர் உட்பட பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.